இது ஒரு ஜனநாயக நாடு
அதிசயமான
ஜனநாயக நாடு
இங்கு தேர்தலில் தோற்றவர்கள்
எல்லோரும் ஓன்று சேர்ந்தால்
ஆளும் கட்சியாக ஆட்சி செய்யும்
அதிசயம் நடக்கும்
மக்காளால்
புறக்கணிக்கப்பட்டவர்கள்
மந்திரியாகி வலம் வருவார்கள்
மக்களையே வதம் செய்வார்கள்
நல்லது செய்து
நாட்டை ஆண்டவர்கள்
எங்கே போனார்கள்?
என்று தெரியவில்லை
அறிவிக்கை விடுபவர்களே
ஆட்சியை பிடிக்கிறார்கள்
அறிவிக்கை விடுவதோடு
அரசியல் வாதிகள்
அடங்கி விடுகிறார்கள்
இது ஒரு சுதந்திர நாடு
விசித்திரமான
சுதந்திர நாடு
இங்கு (சு)தந்திரமாக
எதையும் எழுதலாம்
எதையும் பேசலாம்
நாட்டை சுரண்டுவோரை
நல்லவராக எழுதவேண்டும்
(இல்லையேல்
தீவிரவாதி என்று
திரித்து சொல்லுவார்கள்)
ஆட்சியில் இருப்போரை
ஆராதனை செய்யவேண்டும்
(இல்லையேல்
என்கவுண்டர் பட்டியலில்
இடம் பிடிக்க வேண்டும்)
இது ஒரு குடியரசு நாடு
அதிசயமான
குடியரசு நாடு
இங்கு குடியிருப்போர்கள்
எல்லோரும் குடிமக்கள்
(குடி(கார)மக்களை
குறிப்பிட்டு சொல்லவில்லை
அரசே விற்கும் கடைகளில்
அரசுக்கு வரிகட்டி குடிப்பவர்கள்
அவர்களை குறைசொல்ல
எவருக்கும் தகுதி இல்லை)
அடையாள அட்டை இருக்கும்
பொது விநியோக அட்டை இருக்கும்
தேர்தல் நேரத்தில் மட்டும்
இருந்த ஓட்டும் இல்லாமல் போய்விடும்
இது மட்டும் இதுவரை புரியவில்லை
இது ஒரு வல்லரசு நாடு
வித்தியாசமான
வல்லரசு நாடு
இங்கு ஏழைகள் எவருமில்லை
இருந்த ஏழைகளுக்கு
இலவசங்கள் கொடுத்து
பணக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள்
(இலவசம் என்றால்
அம்பானி கூட வரிசையில்
அவசரமாக வந்து நிற்பார்
அது வேறு கதை)
மாதத்துக்கு இரண்டு
ஏவுகணை விடுகிறோம்
அடுத்த நாட்டு
ஆய்வுக்கூடங்களையும்
ராக்கெட்டில் வைத்து
ஆகாயம் அனுப்புகிறோம்
(வயிற்று பசி தீர்க்கும்
விவாசாயிகளையும்
அதில் வைத்து
அனுப்பி விட்டோமோ?)
இங்கே சூரியனை
இழுத்து வர முடியுமா?
நட்சத்திரங்களை
நமுட்ட முடியுமா?
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்
(மின்சார தட்டுப்பாடு
அதற்க்கு போடும் கூப்பாடு
ஆதிகாலத்துக்கு
போய்விட்டோமோ?
சமையல்வாயு விலையேற்றம்
சிக்கி முக்கி கல்லைத்தான்
தேட வேண்டுமோ?)
அது சரி....
எந்த நாட்டை பற்றி
இப்படி புலம்புகிறாய்?
அய்யயோ....
இது
இந்திய நாடு
இல்லையப்பா
இந்த நாடும்
இந்த பூமியில்தான் இருக்கு
தலையில் ஒரு பெரிய மலையும்
காலடியில் மூன்று கடல்களும்
(நிறைய பேர் சொல்லிவிட்டார்கள்
கடவுள்தான் இந்த நாட்டை
காக்க வேண்டும் என்று)
நானும் சொல்கிறேன்
கடவுள்தான்
கருணை காட்ட வேண்டும்
(எந்த மதக் கடவுள்?
என்று கேட்டு எவரும்
சண்டை போட்டு
மண்டை உடைக்காதீர்கள்)
எனக்கு எதற்கு வம்பு?
இது ஒரு நாடு
(நல்லதை தவிர
எல்லாம் நடக்கும்
நல்ல நாடு)
நாடு இது நல்ல நாடு!
Thanks-YouTube-Uploaded by liaquat
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |