-----தந்தை பெரியார் ஒருவரே!-4 -------
செங்குருதி எந்த சாதி?
என்று கேட்டார்
எட்வின் அர்னால்டு
இந்தியர்களில்
உயர்ந்தோர் என்பவர்கள்
நெற்றியிலும் தலையிலும்
எல்லோருக்கும் தெரிய
குறியீடு வைக்கிறார்கள்
இந்த குறிதான்
சாதியை தீர்மானிக்கும்
விதியா? இல்லை சதியா?
உயர்ந்தோர் என்று
உலாவியவர் எல்லாம்
ஒழிந்திட இங்கு
உழைத்தவர் ஒருவர்
அவரே தந்தை பெரியார்!
சுயமரியாதை
சிந்தனை கொண்டால்
தாழ்ந்தோர் இங்கு
எவருமில்லை என்று
பகுத்தறிவு ஞானத்தை
பரப்பியவர் ஒருவர்
அவரே தந்தை பெரியார்!
உலகில் பகுத்தறிவாளர்கள்
நிறையபேர் இருந்தனர்
சிறந்த பகுத்தறிவாளர்
சிறந்த சிந்தனையாளர்
என்று சொல்ல இருந்தவர்
களம் கண்டு வாகை சூடியவர்
தந்தை பெரியார் ஒருவரே!
(தொடரும்)
************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |