google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கழுகுப்பார்வை

Tuesday, October 23, 2012

கழுகுப்பார்வை




சில ஆண்கள்
இளம் பெண்கள் மீது
காமம் கொண்டு
பார்க்கும் பார்வை....

சில முதலாளிகள் 
தொழிலாளிகள் மீது 
நேசம் கொண்டு 
பார்க்கும் பார்வை....


சில அரசியல்வாதிகள்
தேர்தல் நேரத்தில் 
வேஷம்  போட்டு
பார்க்கும் பார்வை....

சில மதவாதிகள் 
கலவர காலங்களில்
இதயமில்லாமல்   
பார்க்கும் பார்வை....

இப்படிச் சொல்லலாம் 
நிறையப் பேருடைய 
ழுகுப்பார்வைகள்...   


மனிதப்பார்வையை விட
கழுகின் பார்வை
நான்கு மடங்கு அதீதமானது

கழுகு-
பறவை இனங்களில்
விசித்திரமானது
மிகுந்த பலசாலி
கூரான அலகு
திடமான கால்கள்

ஆண் கழுகைவிட 
பெண் பருமனாக இருக்கும்
உயர்ந்த மரங்களில்
கூடுகட்டி முட்டை இடும்
இரண்டு முட்டைகள்தான்.
பந்த பாசங்கள் கிடையாது
இரண்டு முட்டைகளில்
முதலில் வெளியே வருவது
அடுத்ததைக் கொன்றுவிடும்.
பிறக்கும்போதே இருக்கும் குணம்


இன்னுமொரு அரிய குணம் 
புயல் காற்றின் உந்து சக்தியில் 
சிறகுகளை விரித்து தப்பிவிடும்
   
எவ்வளவு உயரத்தில் இருந்தும்
இரையைப் பார்த்துவிடும்
அசைவ பட்சினி
முப்பது கிலோ எடை
தூக்கும் சக்தி 
உயிரோடு  இருப்பனவற்றையும் 
சாகடித்து உண்ணும் சிந்தனை!

ஆனால்....

புராணங்களிலும்
இதிகாசங்களிலும்
புனிதமானவைகள்

பண்டைய பெருவின்
மோசே மக்களின்
வழிபாட்டு இனம்.


கழுகுச் சிறகுகளை
பழங்குடியினர் 
பரிசளிக்கும் முறைகேடு 
அமரிக்கக் கழுகு சிறகு சட்டம்
இயற்ற காரனம்.

சில மதங்களில்  
தெய்வீக தன்மை கொண்டது.
ஜீயஸ் கடவுளின்
காவல் தெய்வம்

சமீபத்தில் லிப்பி
"ஈகிள்ஸ் நகரம்"மானது.

 *************************************        
இதோ கழுகின் கொடுரப்பார்வை 
****************************************


                  Thanks-YouTube-Uploaded by xtexred

  ************************************************
என்னப்பா....
இப்படி மொக்க பதிவுகள் 
போடா ஆரம்பிச்சிட்ட...?
எதையும்  
தெரிந்துகொள்வதில் 
தப்பில்லையே!

பொய் சொல்லாதப்பா....
இப்பலாம் வலைதளங்களில் 
என்ன எழுதுராங்கனு எல்லோரும்  
கழுகுப்பார்வை  பார்க்கிறாங்க 
அதனால...இப்படி பட்சி சொட்சினு..... 

புத்தகங்கள் படிப்பதற்கு 
அதன் மேல் நின்று 
இப்படி ஆடுவதற்கு அல்ல
ஆட்டம் போட்டவர்கள் 
போன இடமும் தெரியல!



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1