கலக்குற சந்துரு.....!
என்று ஒரு விளம்பரம் வரும்
பழைய இல்லத்தை வர்ணம் தீட்டி
புதுசு போல் புதுப்பித்தவரை பார்த்து
அவருடைய நண்பர்
ஆட்சிரியத்தில் சொல்வதுபோல்...
அந்த வார்த்தைகளில்
உண்மையில் புதைந்திருப்பது
பொறாமையும் ஆதங்கமும்.
அப்படிப் பேசும் ஆதங்க மனிதர்கள்
அலைகிறார்கள் நிறையப் பேர்
அவர்களை என்ன சொல்வது..?
அறியாமையும் அவநம்பிக்கையும்
அடையாளமானவர்கள் அவர்கள்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
அவர் கழுத்தில் ஜொலிக்கும்
தங்கச் செயின்கள்
கை விரல்களில் மின்னும்
வைர மோதிரங்கள்
விலையுயர்ந்த கைகடிகாரம்
ஆனாலும்
அவர் முகத்தில் தெரியும் அமைதி
வார்த்தைகளில் தெரியும் அடக்கம்
செயல்களில் தெரியும் அறிவு
அவருடைய முந்தைய வாழ்க்கையை
அறிந்தவர்களுக்குச் சொல்லத்தோனும்
கலங்காதே சந்துரு.....!
அவருடைய முந்தைய வாழ்க்கையை
அறியாவர்களுக்குச் சொல்லத்தோனும்
கலக்குற சந்துரு.....!
ஒரு தனியார் முதலாளியிடம்
அடிமை போல் வேலை செய்து
சேமித்தவைகளை வைத்து
சுயதொழில் செய்து
சுகவாசியாக வாழ்கிறார்
அவர் வாழ்ந்த வாழ்க்கையும்
அவர் வாழும் வாழ்க்கையும்
அனைத்தும் அவருடையது
அறிவு-அடக்கம்-அமைதி
Thanks-YouTube- by saregamasouth
**********************************************************************
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Bless the hearts who care for the helpless.. Do share with all..
Thanks- Pearl Mubee
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |