இயற்கையை மறந்துவிட்டு
இன்பம் தரும் இயற்கையின்
இயல்புகளை மறுத்து விட்டு
செயற்கையை மனிதன்
சொந்தம் கொள்கிறான்
கொஞ்சம் கொஞ்சமாக
செத்து மடிகிறான்
ஆகாயத்தில்
அலையும் பருந்துக்கு...
உயிரற்ற உடல்களே விருந்து
தரையில் தவமிருக்கும்
செயற்கை பிடாரிகளுக்கு
என்றோ ஒருநாள்
மனித உயிர்களே விருந்து
கைபேசி கோபுரங்கள்
கண்ணுக்கு தெரியாத
கதிர் வீச்சு அபாயங்கள்
அணு உலையில் கூட
ஆபத்து இருக்கு?
ஆபத்து இல்லை?
அன்றாடம் ஆராய்ச்சிகள்
திண்டாடும் விவாதங்கள்.
தீராத போராட்டங்கள்
உண்ணும் உணவிலும்
உயிரை குடிக்கும் விஷங்கள்
செயற்கை போடும் வேசங்கள்
இயற்கையுடன்
இணைந்து போனால்
ஏமாற்றம் எதுவுமில்லை
செயற்கையுடன்
சேர்ந்து கொண்டால்
சோகத்துக்கு பஞ்சமில்லை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |