google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தொல்லை காட்சி பேட்டி

Wednesday, October 10, 2012

தொல்லை காட்சி பேட்டி


கைபேசி கத்தியது
நண்பரின் குரல்
தொலைகாட்சி செய்தியில்
அவரது பேட்டி
அவசரமாக பார்க்க.....

பேட்டி கொடுக்கும் அளவுக்கு
அப்படி அவர் ஒன்றும்
பிரபலமானவர் அல்ல

தொலைகாட்சியை
அவசரமாக முடுக்கினால்

ஆவேசமாக
பேசிக்கொண்டிருந்தார்

தண்ணீர் வண்டி
வரவில்லை என்று
தெருவில் நடக்கும்
மறியல் போராட்டம்
கூட்டத்தோடு கூட்டமாக
கூக்குரல் எழுப்பிக்கொண்டு..

காவேரி தண்ணீருக்காக
கத்துவது போல்.....

அந்த போராட்ட நண்பரோ  
அந்த தெருவை சார்ந்தவர் அல்ல
அந்த பகுதியை சார்ந்தவர் அல்ல
அந்த ஊரைச் சார்ந்தவரும் அல்ல

அந்த வழியே சென்றவர்
தொலைக்காட்சியில்
முகம் காட்டுவதற்காக
கூட்டத்தோடு சேர்ந்தவர்

அடுத்த நாள் அலுவலகத்திலும்
அவருடைய அலப்பறை
தாங்க முடியாத கழுத்தறுவை

தொலைக்காட்சி செய்யும்
தொல்லை சேவைகளில்
இதுவும் ஓன்று....இன்று  

தொலைக்காட்சியில்
முகத்தை காட்டுகிறார்கள் என்று
மூத்திர அறை கேட்டும் போராட்டம்

நிறைய போராட்டங்கள் நாட்டில்
இப்படித்தான் அரங்கேருகிறதோ?   

  
Thanks-SoundCloud- by Aj Tamil Entertainment

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1