google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பெண்ணியம் காவலர்

Wednesday, October 10, 2012

பெண்ணியம் காவலர்




    -----தந்தை பெரியார் ஒருவரே!-5---


சமுதாயத்தில் பெண்கள்
சுயநல ஆண்களின்
முகம்பார்க்கும் கண்ணாடியாக
அல்லல் படுகிறார்கள் என்று
ஆரம்பித்து வைத்தார் அன்று
பெண்ணிய இயக்கத்தை
விர்ஜீனியா உல்ஃப்
ஆங்கிலப் பெண் இலக்கியவாதி 

இல்லங்களின்
இண்டு இடுக்குகளில்
அடைபட்டுக்கிடந்த
பெண்களை எல்லாம்
சம உரிமைகளுடன்
அரசியலில் பங்கெடுக்க
அறைகூவல் விடுத்தார்
அமெரிக்கப் பெண்மணி
பெட்டி ஃபீரிடன்.

இந்தியாவில் மட்டுமே
பெண்ணிய இயக்கம்
ஆண்களாலே
ஆரம்பிக்கப்பட்டது

தமிழகத்தில்
தந்தை பெரியாரின்
பெண்ணியச் சிந்தனை
பேரியக்கமானது
பெண்களைத் தாழ்வுபடுத்தும்
தரித்திரம் மூட நம்பிக்கைகளே!

மூட நம்பிக்கைகளுக்கு
மூல காரணமாய்
கடவுள் நம்பிக்கையே!

அதை அழித்திடவே
அவரது சுயமரியாதை இயக்கம்

உலகில் பகுத்தறிவாளர்கள்
நிறையபேர் இருந்தனர்
சிறந்த பகுத்தறிவாளர்
சிறந்த சிந்தனையாளர்
என்று சொல்ல இருந்தவர்
களம் கண்டு வாகை சூடியவர்
தந்தை பெரியார் ஒருவரே!
                         (தொடரும்)


 
பெரியாரின் வாழ்வும் போராட்டங்களும்
 தமிழருவி மணியன் உரை (பாகம்4)
Thanks-SoundCloud- by Thiru Yo
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1