இதுவரை
நான் கொடுத்த
வாடகைப் பணத்தை
சேர்த்து வைத்திருந்தால்...
இதுவரை
டாஸ்மாக்கில்
நான் கொடுத்த பணத்தை
அரசாங்கம்
திருப்பிக் கொடுத்தால்...
இதுவரை
நான் கரியாக்கிய
சிகரெட் பணத்தை
சீக்கரெட்டாய் சேர்த்திருந்தால்...
சென்னை அண்ணா நகரில்
அரண்மனை போன்று
அழகான வீட்டுக்கு
சொந்தக்காரனாயிருப்பேன்
இப்பவும் ஒன்றும்
கெட்டுப்போகவில்லை
இருக்கும் காசை சேர்த்து
மாநகராட்சியில் பணம் கட்டி
அருகில் உள்ள சுடுகாட்டில்
ஆறடி நிலம் வாங்கிவிட்டேன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |