google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எறும்பும் இறகும்

Wednesday, October 31, 2012

எறும்பும் இறகும்



அந்தச் சிறிய எறும்பின்
கண்களில் பட்டது
ஒரு பறவையின் இறகு....

அளவிட முடியாத
ஆனந்தம் கொண்டு 
அந்த இறகை
தன் பொந்து வீட்டுக்குள்
இழுத்துச் செல்ல நினைத்தது

அந்தச் சிறிய எறும்பு...
பலமுறை தன் பாதையில்
தடைகளை எதிர்கொண்டு
இடை நிறுத்தப்பட்டாலும்
தேவையான மாற்றுப்பாதையை
தேடிக்கொள்ளும் உடனே

ஒரு கட்டத்தில் அதன் பாதையில்
மிகப்பெரிய விரிசல்....
ஆனாலும் அந்த எறும்போ
விரிசலின் விளிம்பு வரை
அந்த இறகை இழுத்து வைத்து
நீண்ட தூரம் பயணித்து
விரிசலின் மறு பக்கம் சென்று
இறகை மீண்டும் இழுக்கத் துவங்கியது

இறுதியில் அந்த எறும்பு
அதன் பொந்து இல்லத்தை
அடைந்த போது...
அதன் சிறிய துளை வீட்டுக்குள்
அந்தப் பெரிய இறகு நுழையவில்லை

ஆனாலும் அந்த எறும்பு
அந்த இறகு மீது ஏறி
வெற்றிக் களிப்பில் மிதந்தது
அதன் காவியப் பயனத்தில்தான்
எத்தனை இடறுகள்....

இந்த எறும்புக்கதை துரும்புக்கதை
இங்கே எதுக்கப்பா....?
என்று கேட்கும் நண்பர்களே!

இப்படித்தான்
என் எழுத்துப் பயணத்திலும்
எனக்கு ஏகப்பட்ட இடையூறுகள் 

ஏகப்பட்ட இடையூறுகள்
வந்து சேரும் மிரட்டல்கள்
ஆனாலும் என் பயணம் தொடரும்
என் காலமும் முடியப்போகிறது
இப்படி ஒருவன் இருந்தான் என்று
இந்த உலகம் நாளை நினைக்கட்டும்

இன்று நானோ
ஏ.சி. அ(சி)றையில் இருக்கும்
கோட்டும் சூட்டும் போட்ட
கேடு கெட்ட கொத்தடிமை
அடிமை....
இங்கு இருந்தால் என்ன...?
எங்கு இருந்தால் என்ன....? 

எழுதுவது என் பிழைப்பு அல்ல
எழுதுவது என் கடமை
எப்படி எனக்கு வாக்களிக்கும் உரிமையோ
அப்படித்தான் அதுவும்
சமுக அவலங்களை எழுதுகிறேன்
அவலம் செய்வோருக்குத்தான்
அது சங்கடமாயிருக்கும்
அவதூறுகளும் அருவெறுப்புகளும்
எதுவும் என் எழுத்தில் இருக்காது.
அதிகமாக நான் எழுதுவது
மனிதர்கள் பற்றி அல்ல
குரங்குகளும் குருவிகளும்
கடிக்கலாம் கொத்தலாம் என்னை
புகார் கொடுக்கும் அளவுக்கு
அவைகளுக்கு புத்தி இல்லை. 


Ants create a lifeboat in the Amazon jungle - BBC wildlife 

                                                                 Thanks-YouTube-Uploaded by BBCWorldwide

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1