அழகு-
வானத்தின் அழகு
அது வரையும்
வானவில்லில் தெரியும்
மேகத்தின் அழகு
அது மலை முகட்டில்
மறைவதில் தெரியும்
காற்றின் அழகு
அது மூங்கில்களில்
மோதும் போது தெரியும்
மலரின் அழகு
அது சிரிக்கும்
இதழ்களில் தெரியும்
குழந்தையின் அழகு
அது கொஞ்சிப் பேசும்
மொழியில் தெரியும்
மங்கையின் அழகு
அவள் அசைக்கும்
விழிகளில் தெரியும்
ஆனால்
அழகை அழகாய்
அனுபவிக்க வேண்டும்
அபகரிக்க நினைத்தால்
ஆபத்தில் முடியும்.
Thanks-YouTube-Uploaded by MadePossible
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |