அடர்ந்த காட்டுக்குள்
அமைதியின்
அர்த்தம் சொல்லும்
அவைகள்.....
கவிதை பாடும் மரங்கள்
அங்கே தவழும் நிசப்த்தம்
நெஞ்சுக்குள் வேர்க்கும்
கவலைகளை
களைந்து விடும்
அங்கே நடக்கும்
காற்றோடு
கண்ணாமூச்சியாட்டம்
சிரித்து விளையாடும்
சின்னப் பூக்களின்
வாசத்தை சுவாசித்தால்
சோகம் எல்லாம்
சொல்லாமல் போய்விடும்!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |