அங்கே இங்கே கடன் எடுத்து
புறநகரையும் தாண்டி
ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி
வீடு கட்ட குழி தோண்டினால்...
வந்தது........வந்தது
ஒரு வினோத சப்தம்
அய்ம்பொன் சிலையோ?
தங்க காசு புதையலோ?
வேலையாட்களை
விரட்டி அடித்து விட்டு
நானே தோண்டினேன்
அகப்பட்டது...?
ஒரு மண் கலயம்
திறந்து பார்த்தால்
சாம்பல் நிறத்தில் ஏதோ ஓன்று....
அதற்குள் வந்துவிட்டார்கள்
ஊர் பெரியவர்கள்
தாசில்தார் காவலர்கள்
தொல்பொருள் ஆய்வாளர்களும்
புதையல் கிடைத்து
தங்க காசுகளை
பதுக்கிவிட்டதாக
புலம்பினார்கள்
ஓட்டை கலயத்தையும்
என்னையும் உற்றுப் பார்த்து
அவர்களே தோண்டினார்கள்
ஆழத் தோண்டினார்கள்
அகப்பட்டது அங்கே
இத்துப்போன மனித எலும்புகள்
கொலைகாரனை பார்ப்பதுபோல்
என்னைப் பார்த்தார்கள்
அந்த ஏரியா முழுவதும்
ஆழத் தோண்டினார்கள்
அப்புறம்தான் கண்டுபிடித்தார்
அகழ் ஆய்வாளர் அப்பாடக்கர்
அந்த காலத்தில்
இந்த இடம் சுடுகாடு என்று.
அன்றிலிருந்து தேடுகிறேன்
புதையல் நகர் என்று
பட்ட(டா)நாமம் போட்டு
சுடுகாட்டை விற்ற
ரியல்...? எஸ்டேட் அதிபரை...
Thanks-YouTube-Uploaded by sittukkuruvi
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |