google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நாளை....

Wednesday, November 28, 2012

நாளை....




நாளை-
அகராதியில் அதன் பெயர்
நழுவலா...? மழுப்பலா..?
அல்லது  
நம்பிக்கையின் விதையா?
ஆகட்டும் பார்க்கலாம்!
(கர்மவீரரின் மாமந்திரம்)

இன்று முடியாதது
நானை நடந்திடுமா?
இன்று போன சூரியன்
நாளை வரவில்லை எனில்
என்ன செய்வது.....?
யாரிடம் முறையிடுவது..?

தினம்தோறும்
நினைத்துப் பார்க்கும்
மந்திர வார்த்தை...
‘நாளைக்காவது
அதிகாலையில் எழுந்து
நடை பயிற்சி போகவேண்டும். 

நகரும் வாழ்க்கை
மரத்தடியில்
மல்லாக்கப் படுத்திருக்கும்
பரதேசியின் பகல்கனவு...
‘அமைச்சரே!
மாதம் மும்மாரி
மழை பெய்கிறதா...?

தெருவில் நிசப்தம்
மதக்கலவரம் மறைந்ததா..?
சாதிக்கலவரம் செத்ததா..?
ஒ...ஊரடங்கு உத்தரவா..?
நாளை இது தீருமா..?
இல்லை இன்னும் வருமா
வேறு பெயரில் வேதனை..?

நிழல் போல் தொடரும்
மரணத்தின் சாயல்...
நினைத்துப் பார்ப்பதில்லை
நாளை வருமா...மரணம்?
கடவுளிடம் கேட்டு
தள்ளிப் போடமுடியுமா?
மருத்துவரை பார்த்து
மாத்திரை விழுங்கனுமா..?

எரியூட்டினால்
பீனிக்ஸ் போல
எழுந்து வருமா.....?
புதைத்தால்
பீறிட்டு முளைக்குமா...?

இன்னும் எழுதப்படாத
இதயத்தில் இருக்கும்
இந்த வார்த்தைகள்......

அவநம்பிக்கையை
அகற்றி விட்டு
தன்னம்பிக்கையை
சுவாசித்துக்கொண்டு...

அம்மாவின் புலம்பல்.....
“ஏண்டா...இப்படி பண்ற...?
நடுராத்திரியில்
நீயும் தூங்காம..
என்னையும் தூங்க விடாமா
என்னத்தடா எழுத்துர...?
விளக்கை அனைச்சிட்டு தூங்கு
நாளைக்கு எழுதலாம்!“

****************************************************************
இன்றைய நண்பர் வலைப்பூ.....................
நன்றி-

இப்படியும் ஒருவர்!

ஒருமுறை... காமராஜரின் தாயார்,
தன் மகனுக்குக் கடிதம் எழுதினார்.....மேலும்  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1