google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புது அகராதி! புது அர்த்தங்கள்!

Friday, November 30, 2012

புது அகராதி! புது அர்த்தங்கள்!




கடவுள்-
எதையும் கண்டுக்காமல்   
கல்லு மாதிரி இருப்பவர்

யோகி-
எதற்கும் வாயைத் திறக்காமல்
ஊமை போல் இருப்பவர்

ஞானி-
நாம் தேடிப் போகும் நபர்
எதையும் நம்மிடம் கேட்காதவர்

பரதேசி-
நம்மைத் தேடி வரும் நபர்
எதையாவது நம்மிடம் கேட்பவர்

காதல்-
கடையில் விற்காத மது
காதல் குடியைக் கெடுக்கும்!
காதல் பழக்கம்
உடல் நலத்தைக் கெடுக்கும்!

ஆத்திகம்-
இல்லாததை
இருக்கு என்பது.

நாத்திகம்-
ஏட்டிக்குப் போட்டியாக
எதையாவது பேசுவது.

பகுத்தறிவு-
எல்லாம் தெரிந்ததாக
காட்டிக் கொள்ளும்
அலம்பல்வாதி

தலைவர்-
எல்லோரையும்
மேய்க்கத் தெரிந்தவர்
எல்லோரையும்
ஏமாளியாக நினைப்பவர்

பிரபலங்கள்-
அதிஸ்டக் காற்றால்
அடித்துச் செல்லப்பட்டு
கோபுரக் கலசத்தில்
ஒட்டிக்கொண்ட குப்பைகள்

காவேரி-
அன்று நதியின் பெயர்
இன்று சதியின் பெயர்
தமிழ் நாட்டுக்கு  
என்றும் விதியின் பெயர்




******************************************************************************

இன்றைய  நண்பர் பதிவு...................

நன்றி.................
My Photoவிமலன் 

சிட்டுக்குருவி


மறுபடியும்,மறுபடியுமாய்,,,, 

நாய்கள் பெருத்த வீதிகளாக

உருமாறி காட்சிப்படுகிறது ஊர்.

வீட்டு மாடியில் ஒன்று,

பூட்டப்பட்டிருந்த கேட்டின்
அருகாமையாய் ஒன்று என...மேலும்

 

 

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1