google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இந்தப் படத்துக்கு ஏண்டா வந்த ..சோமாறி?

Wednesday, November 21, 2012

இந்தப் படத்துக்கு ஏண்டா வந்த ..சோமாறி?



பேராசை-
பட்டத்துக்குப் போட்டி போட்டு 
வாரிசு யுத்தம்  நடக்கையில்
படுக்கையில் கிடந்த மன்னரோ
பல நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு
பலான லேகியம் விழுங்கியபடி....
*************************************** 


சாதி-
படித்து வாங்கிய பட்டத்தை 
மறைத்து விட்டு
பல்யிளித்துக் கொண்டு   
பிறந்து வாங்கியப் பட்டம்
பெயருக்குப் பின்னால்...
படித்திருக்கவே வேண்டாமே...?
*********************************************


மதுவும் மாதும்-
மாது தரும் போதையை விட
மது தரும் போதை மலிவானது
நீண்ட நேரம் நீடிக்கக் கூடியது.
இரண்டுக்கும் பின் விளைவுகள்
இருக்கிறது நிறைய....
இரண்டும் புடுங்கும்....பணம்.
*********************************************


படையல்-
பூஜை முடிந்து
பிரசாதம் வரும் என்று
ஆவலுடன் காத்திருந்தால்
கைவிரல்களைச் சூப்பிக்கொண்டு
ஏப்பம் விட்டார் சாமி...
அடமழையில் அவருக்கே
ஏழு நாட்கள் பூஜை இல்லையாம்.
***********************************************
 
அடகு-
வாங்கும் போது
எட்டு கிராம் இருந்த 
தங்கம் மோதிரம்...
எட்டு தடவை போனது 
அடகுகடைக்கு...
தேய்த்து...தேய்ந்து 
இப்போது 
இல்லாமல்லே போனது... 
***********************************************
 


கடி-
படம் பார்க்கப் போனேன்
படத்திலும் கடி! 
நிஜத்திலும் கடி!
அரங்கு நிறைய 
அமர்ந்திருந்தன
மூட்டைப்பூச்சிகள்.....
"இந்தப் படத்துக்கு
ஏண்டா வந்த ..சோமாறி?"

*****************************************************

இன்றைய பதிவர் நண்பர்  பக்கம் ....
நன்றி- My Photo
மலையருவி கவிதைகள் (நா.இளங்கோ)

சாக்கடையோர நாயாய் என் கவலைகள்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1