google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இரு கைகளும் இல்லாத ஒரு பெண் விமானி!

Sunday, December 09, 2012

இரு கைகளும் இல்லாத ஒரு பெண் விமானி!




பிறக்கும் போதே
அவள் உடலில்
இரண்டு கைகளும் இல்லை....
ஆனால்அவள்...
தன்னம்பிக்கையுடன் பிறந்தவள்.
 Cox as a child
ஜெசிக்கா காக்ஸ்-
சியர்ரா விஸ்டா, அரிசோனா, அமெரிக்காவில்
1983 ஆம் ஆண்டுப் பிறந்தார்.
பிறவியிலேயே கைகள் இல்லாவிட்டாலும்
உககின் வழக்கமான வாழ்வுக்கு
தன் கால்களைப் பயன்படுத்தினார்.
 Jessica curls her hair using her feet
பதினான்கு வயதில்
அவள் கற்றுக்கொண்ட நாட்டியம்
அரங்கேற்றவிழா....
அரங்கமே கைதட்டி மகிழ...
அது அவளுள் விதைத்தது
அளப்பரியா தன்னம்பிக்கை..
இன்னும் பல சாதனைகள் செய்ய.

டைக்குவாண்டோ பயிற்சியுடன்
அதே வயதில் அவள் பெற்றது
சர்வதேச டைக்குவாண்டோ கூட்டமைப்பு-ல்
தற்காப்புக் கலையில் கருப்புப் பட்டை.

ஒருவர் கைகளால் செய்யக்கூடிய
அத்தனை செயல்களையும்
தன் கால்களைக் கொண்டு
நேர்த்தியுடன் செய்வது அவள் அழகு.

அரிசோனா பல்கலைக்கழகத்தில்
உளவியல் இளங்கலை பட்டதாரியான
அவரின் திருமந்திரம்......
ஆர்வமுள்ள இதயத்துக்கு
ஆகாதது எதுவுமில்லை இவ்வுலகில்.
Jessica cox-open the door of the plane using her legs
பறக்க கற்றுக்கொள்வதை
பிரபலமான சாதனையாக
ஜெசிக்கா காக்ஸ் நினைத்து...
இரண்டு விமானப் பயிற்றுனர்கள் உதவியுடன்
விமானம் ஓட்டுவதில் தீவிர பயிற்சி பெற்று...
அவர் அக்டோபர் 10, 2008 அன்று
தனது பைலட் உரிமம் பெற்றார்.
jessica-cox-22
கால்களைக் கொண்டு
விமானம் செலுத்துவதில்...
முதல் நபர் என்ற கின்னஸ் உலகச் சாதனை!

உடலில் குறை இருந்தால் என்ன....?
உள்ளத்தில் குறைபாடு இல்லையேல்
உயர உயரப் பறக்கலாம்
உலகத்தில் இல்லை எல்லை!   

                   thanks-YouTube-uploaded by rightfootedwoman

 Thanks-images and story source from here


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1