google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எமனும் படிக்கவில்லையோ?

Sunday, December 23, 2012

எமனும் படிக்கவில்லையோ?



உன் அரிச்சுவடி
ஆரம்பமானது
விருதுப்பட்டி
திண்ணைப் பள்ளி

ஆறு வயதில்
தந்தையை இழந்ததால் 
பதினோரு  வயதில்
பள்ளிப்படிப்பு
பாதியில் போனது.
அந்த ஆதங்கமே
எல்லோருக்கும் கல்வி 
என்று எழுந்ததோ 
எரிமலையாய் உன்னுள்?

பரம்பரை கல்வி கொள்கையால்
மூடப்பட்ட பள்ளிகள் ஆறாயிரம்
ஆட்சிக்கு நீவீர் வந்ததும்
அத்தனையையும் திறந்து வைத்து....
அதற்கும் மேலே...
பன்னிரண்டாயிரம் பள்ளிகள்
ஊரெங்கும் திறந்து வைத்து...
அறிவுப்பசியைத் தீர்த்தவரே!

பசி வந்தால் பத்தும் பறக்கும்
படிப்பு மட்டும் பறக்காதோ?
படிக்கும் பிள்ளைகளின்  
வயிற்றுப் பசி தீர்த்தவரே!

இந்த உலகத்திலேயே 
படித்த  மேதைகளுக்கு 
வராத இந்த அறிவு
உமக்கு மட்டும்
வந்தது எப்படி அய்யா?

இன்று முட்டை போடுகிறார்கள்
சட்டை போடுகிறார்கள்
போட்டதும் வாக்கு கேட்கிறார்கள்.

எமனும் படிக்கவில்லையோ?
அந்த எமலோகத்தில்
எவனும் படிக்கவில்லையா?
படிப்பதற்குத்தான்
பள்ளிகள் இல்லையோ?
அவன் படிப்பதற்கும்
அங்கே பள்ளிகள் திறப்பதற்கும்
அழைத்துச் சென்றானோ உம்மை? 


      ..............................................பரிதி.முத்துராசன்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1