google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்-காதல் விழிப்புணர்வு செய்யுமா?

Sunday, December 23, 2012

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்-காதல் விழிப்புணர்வு செய்யுமா?




வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் விஜய் வசந்தின் வித்தியாசமான திரைப்படம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாகச் செய்தி.
ஏன்டா காதலிச்சோம் என்று காதல் எச்சரிக்கை செய்யும் காலத்திற்கேற்ற படமாக இருக்குமா?
 BEWARE OF LOVE LOVE LOVE-என்று முழக்கமிட்டு வருகிறார் விஜய் வசந்த்...இதற்காகவே அவரை வாழ்த்தலாம்.

ஆனால் அப்டத்தின் போஸ்டர் சொல்வதோ காதல் சிரிப்புச் சித்திரமாகத் தெரிகிறது. விஜய் வசந்தும் அதைத்தான் உறுதிபடுத்துகிறார். சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பாரா?

இந்தியாவில் தமிழகமே காதல் தற்கொலையில் முதலிடத்தில் உள்ளதாகப் புள்ளிவிவரம். இந்த ஆண்டில் தமிழகத்தில் 588 காதல் தற்கொலைகள் நடந்ததாகவும் சென்னையில் மட்டுமே 61 காதல் தற்கொலைகள் நடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றன. இன்னும் தெரியாமல் எத்தனை மறைக்கப்பட்டுள்ளதோ?..அல்லது மறைந்தனவோ?

தெரியாமல் உன்ன காதலிச்சிட்டேன்- திரைப்படம் காதலர்களைச் சிந்திக்கச் செய்யுமா?..இப்படத்தால் சமுகத்தில் ஒரு விழிப்புணர்வு காதலர்கள் மத்தியில் வருமா? 

இப்படத்தின்  தலைப்பே வித்திசாசமாகவும் விழிப்புணர்வு தருவதாகவும் வைத்ததற்காக தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்களை பாராட்டலாம்.
நமது சினிமா உலகம் இந்தச் சமுதாயத்தை எல்லா வகையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது விருப்பம். பொறுத்திருந்து பார்ப்போம். 

**********************************************************
இது  சிரிக்க...






துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க...?
சாமி..எனக்கும் கொஞ்சம் ஆசிவாதம் செய்யுங்க நானும் சிரிச்சி ரொம்ப நாளாகுது.... 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1