google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாயனே! நீ பொய்யடா!

Friday, December 21, 2012

மாயனே! நீ பொய்யடா!






மாயன் காலண்டரில்
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்
அதை எழுதிய மாயன்களுக்கோ....
அல்லது அதைப் படித்த பேயன்களுக்கோ....
மண்டையில கொஞ்சம் மூளையைக் காணோம்.

இன்று உலகம் அழிகிறது என்று
வெளி ஊர் பி.பி.சி.யிலிருந்து
நம்ம ஊர் கப்ஸா சீ வரை 
தொலைக்காட்சிகள்  தந்த   
தொல்லைக் காட்சிகள்  அழிந்ததப்பா...
அவர்களின் அழிஞ்சானம் ஒழிஞ்சதப்பா...
மாயா நீ வாழ்க!
உன் மாயங்களும் வாழ்க!  

2012-ல் அழியும் உலகம் என்று
படம் எடுத்த பாம்புக்கு லாபம்
படம் பார்த்தவனுக்கோ
பால் ஊத்திய பணம் நஷ்டம்....

மாயனே! நீ பொய்யடா!-உன்
காலண்டரும் பொய்யடா!-எங்க
கோடாங்கியும் நீயும் ஒன்றடா!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1