google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினி-பிரபலங்களில் ஒரு மாமனிதர்!

Wednesday, December 26, 2012

ரஜினி-பிரபலங்களில் ஒரு மாமனிதர்!




ஒரு தலைமுறையே
புகைக்கும் பழக்கத்துக்கு
அடிமையானது அன்று

அதற்கும் ஒரு வகையில்
காரணமாக இருந்தது
அவருடைய ஸ்டைல்
புகைப்பான்களை
தூக்கிப் போட்டு அவர்
வாயில் கவ்வும் அழகு...

அது இன்று
அவர் வாழ்க்கையிலேயே
விளையாடி விட்டது...

அவருடைய நல்ல மனது
அவரைக் காத்திட்டது  

கையெடுத்து கும்பிடுகிறார்
புகைக்காதீர்கள் என்று
மன்றாடி வேண்டுகிறார்..

அது மட்டுமல்ல...

சமுதாயத்தைச் சீரழிப்பதில்
சினிமாவும் ஒரு காரணி
சில சினிமா பிரபலங்களும்
பல வகையில் காரணம்...

அன்று தமிழகத்தின்
ஒரு பொற்கால ஆட்சியை
புதைத்தது இந்தச் சினிமாதான்

முதலில்...நீங்கள்  
பெற்றோரைப் பேணுங்கள்
குடும்பத்தைக் கவனியுங்கள்  
பிரபலங்களின் மாயையில்
அழிந்து போகாதீர்கள்

அரசியல் பிரமுகர்களும்  
சினிமா பிரபலங்களுக்கும்
ஆண்டவனின் அவதாரங்கள் அல்ல
பெற்றோர்  கால்களில் விழுங்கள்
என்ற கருத்தில்....வேண்டுகிறார்

நதிமூலம் ரிஷிமூலம் எதற்கு...?
இவர் மூலம் வரும் 
நல்ல விழிப்புணர்வு இருக்கு!  
இந்த எண்ணம்
எல்லோருக்கும் வருமா...?

அவர் ஒரு பிரபலமானவர்
உண்மையான பிரபலம்
பிரபலங்களில் ஒரு மாமனிதர்!

RAJINI- A GENTLEMAN CELEBRITY  

பிரபலங்கள் எல்லோரும்
இதுபோல் மாறிவிட்டால்
உலக நாடுகளில்
இந்தியாவுக்கே முதலிடம்
இந்திய மாகாணங்களில்
தமிழகமே முதலிடம் 

........................................பரிதி.முத்துராசன்  

                        thanks-youtube 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1