google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கும்கி-உங்கள் பார்வையில்...?

Wednesday, January 09, 2013

கும்கி-உங்கள் பார்வையில்...?

kumki



அட்டகாசம் செய்யும் காட்டு யானை கொம்பனை அடக்கவல்ல யானையின் பெயர் கொண்ட கும்கி- திரைப்படம் பதிவுலக விமர்சனங்களைக் கண்டும் பயப்படவில்லை ஆனாலும் ஆகா ஓகோ என்று எவரும் பாராட்டவில்லை அதேநேரம் மொக்கை தக்கை என்றும் எவரும் தள்ளவில்லை

கதை பெயரிலேயே உள்ளது ...படத்தில் வேண்டுமெனில் கும்கியானை டூப்ளிகேட் கோயில்யானையாக இருக்கலாம் ஆனால் எழுத்து இயக்கம் பிரபு சாலமன் திரைக்கதையிலும் இயக்கத்திலும் கைதேர்ந்த கும்கி என்பதை நிறைய இடங்களில் வெளிப்படுத்துகிறார்...


காதல் ஒரு காட்டுயானை...? அதை வசப்படுத்தும் சக்தியே  கும்கி ..படத்தில் கும்கியாக மாறத் தத்தளிக்கும் கோயில் யானை இதுவே கதை..காதல் கும்கி! ஆனால் கதையோ பூனைக்(காதல்) கதையாகவும் இல்லாமல் யானைக்(வீரம்?) கதையாகவும் இல்லாமல் தள்ளாடும் படம். 


விக்ரம் பிரபுக்கு தாத்தா சிவாஜியின் ஆசி கிடைத்தது போல்தான். அவரது நடிப்பில் பிரபுவின் சாயல் எதிலும் இல்லை. நிச்சயம் தனக்கென்று நல்ல இடம் பிடிப்பார்.

அவர் கைப்பேசியில் ஒரிஜினல் கும்கி தரகரிடம் பேசுவது எடுத்துக்காட்டு இவரோ அல்லியின் மீது கொண்ட காதலைப் பற்றி பேசுவதும் தரகரோ காட்டுயானை கொம்பனைப்பற்றிப் பேசுவதும் அருமை 


ஊர் பெரியவராக காட்டுராஜா...? நடிப்பு அருமை அவருடைய மகளாக  லட்சுமி மேனன் கதாநாயகி.


படத்தில் பெயருக்கு ஏற்றது போல் அல்லி மலரே! காட்டுவாசிப் பெண் போன்று மிரட்சியுடன் கவர்ச்சி ஆனாலும் இல்லை விரசமுடன் அலர்ச்சி...!


சொர்க்க வானிலிருந்து நீரருவி கொட்டுவது போல் காட்டருவியைக் காட்டும் ஒளிப்பதிவு (நிஜத்தில் அந்த அருவி அப்படியொன்றும் பிரமாண்டமில்லை) அந்தக் காடு ஏதோ அமேசான் காட்டில் இருப்பது போலக் காட்டியது 

இன்னும் பல இயற்கை காட்சிகளைக் காட்டி ஒருவித மாயப் போதையில் நம்மை மயங்கவைக்கும் எம்.சுகுமாரின் ஒளிவண்ணம் தமிழ் படமா? ஆங்கிலப் படமா? என்று ஆராயச் செய்கிறது.  




டி.இமானின் இசை காட்டில் வீசும் தென்றல் போல் உள்ளது நல்ல ஒலிப்பதிவும்கூட.பாடல்கள் நிறைய ஏக்க உணர்வு அதனால்தான் என்னவோ ஒரே டெம்பரில் இசையும் இருப்பது போல்...அந்த குத்துப்பாட்டு வரும் வரை 


கும்கி-என்பார்வையில் நிச்சயம் பார்க்கவேண்டிய நிறைவானப் படம்.
நான் பார்த்தது நேற்று. முன்பே நீங்கள் பார்த்திருப்பீர்களே ...

                                             thanks-YouTube-by KumkiTheMovie

பார்த்தவர்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும் உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்களேன்....கும்கி-உங்கள் பார்வையில்...?  
                                                                    .......பரிதி.முத்துராசன்
*************************************************************************

கும்கி யில் உங்களுக்குப் பிடித்தது எது?

ஒருவர் எத்தனை காரணங்களுக்கு வேண்டுமெனிலும் கருத்திடலாம் வாக்களித்தவர்களுக்கு நன்றி...முடிவு.15/01/2013
****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து......?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1