google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பவர் ஸ்டாரின் வெற்றி ரகசியம் என்ன?

Tuesday, January 15, 2013

பவர் ஸ்டாரின் வெற்றி ரகசியம் என்ன?


powerstar



ருவர் கீழே விழுந்தால் அவரைத் தூக்கி விடுவோரை விட மிதித்துச்செல்வோரே இந்த உலகில் அதிகம் அதிலும் சினிமா உலகம் ஏட்டிக்கு போட்டியானது.கீழே விழவேண்டாம் கூட இருப்பவர்களே குழிதோண்டிப் புதைப்பார்கள் காலை வாரிவிடுவார்கள்


சிலபேருக்கு சனி அவர்கள் நாக்கில் இருக்கும் சிலபேருக்கு அவர்கள் நடிப்பில் இருக்கும் இன்னும் சிலபேருக்கு அவர்கள் தலையில் இருக்கும்.தற்பெருமை அவர்கள் வசந்தகால குறிப்பேட்டில் நடுவுல கொஞ்சமல்ல முழு பக்கங்களையும் காணோம் என்ற கதையாக இருக்கும்.   






பவர் ஸ்டார் - இன்று அத்தனையையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் உலகம் தலையில் தூக்கி வைத்துக் கும்மாளமிடுகிறது.போகிற போக்கைப் பார்த்தால் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் டம்மி-டும்மியாக்கிவிடும் போல் தெரிகிறது.

powerstar
கண்ணா லட்டு திங்க ஆசையா...? என்று கேட்பது அவரே .....உண்மையில் லட்டு விழுங்குபவரும் அவரே!

இந்த வெற்றி அவருக்கு அவ்வளவு எளிதில் வரவில்லை இந்த உச்சத்துக்கு அவர் சடக்கென்று எம்பிக்குதிக்கவில்லை பவர் ஸ்டாரின் இந்த வெற்றியின் ரகசியம் என்ன?



சினிமாமாப்பிரபலங்களின் மாயை வெளுத்துவிட்டதா? டக்கர்பார்ட்டிகளின் போலிநடிப்பு சாயம்போனதா?. சமுதாயத்துக்கு அவர்கள் செய்வது நன்மைஇல்லை என்பதை அனைவரும் அறிந்துகொண்டனரா?


powerstar

இனிமேல் சரியான நடிப்பு இல்லாமல் கடிப்பவர்களுக்குக் காலம் இல்லை 
அவர்களின் ஒஸ்தி குஸ்தி எடுபடாது.
பஞ்ச் டயலாக்கெல்லாம் பஞ்சராகிப்போகும்..
இனி எந்த ஸ்டாரானாலும் சரக்கு இல்லையேல் காலி டப்பாத்தான்!





பவர் ஸ்டார்க்கு இன்று வந்த இந்தத் திடீர் அதிஷ்டம் 
அவர் தேடிக்கொண்டதல்ல...
அவர் மீது அனைவருக்கும் விருப்பு..! அது மற்ற ஸ்டார்கள் மேல் உள்ள வெறுப்பு...? 

சண்டிக்குதிரைகளை மட்டம்தட்ட 
நொண்டிக் குதிரையை உசுப்பேத்தும் கதையா...?

உலகிலேயே ஒரு நடிகர் நடித்த படத்தை பார்க்காமலேயே அதிக ரசிகர்கள் இருப்பது பவர் ஸ்டார் ஒருவருக்கு மட்டுமே அந்த பெருமையை வழங்கியது விஜய் தொலைக்காட்சியின் நீயா?நானா? நிகழ்ச்சியும் கோபிநாத்தின் நக்கல் கேள்விகளும் பவர் ஸ்டாரின் விக்கல் இல்லாத புன்னைகை பதில்களும்                                   
                                                                ....................................பரிதி.முத்துராசன் 
**********************************************************************************
இது என்பார்வையில்......உங்கள் பார்வையில்
 பவர் ஸ்டாரின் வெற்றி ரகசியம் என்ன?

அடுத்து தேர்தல்ல நின்னாலும் நிப்பாரு ....நின்னாருனா ஜெயிப்பாரு 
அய்யோ...போச்சு...அரசியல்வாதிகளுக்கு வைப்பாரு.....?

*******************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1