google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2012 சினிமா-நல்லா சிரிக்க வச்சது யாரு?

Monday, January 14, 2013

2012 சினிமா-நல்லா சிரிக்க வச்சது யாரு?




சினிமா சமுதாயத்தில் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தால் அந்தச் சமுதாயமும் நாடும் நல்வழியில் செல்லும்.
கடந்த ஆண்டு வந்த தமிழ் படங்களில் நகைச்சுவையான படங்கள் சிலவே அவைகளில் நகைச்சுவை நடிகர்கள் மட்டுமன்றி பெரிய கதாநாயகர்களும் அதிரடி சினிமா வீரர்களும் நடித்தவைகளும் உண்டு.

நகைச்சுவை என்ற பெயரில் காதல் விரசங்கள் அடுத்தவரை அவதூறு செய்தல் இல்லாமல் சில படங்கள் அவைகளில் சில உங்கள் பார்வைக்கு.............

நண்பன்-கடந்த ஆண்டுப் பொங்கல் வெளியீடாகச் சங்கர் இயக்கத்தில் வந்த ஹிந்தி தழுவல் என்றாலும் சிறப்பான நகைச்சுவை படம். விஜய்யுடன் ஜீவா,ஸ்ரீகாந்த் இணைந்து மூன்று நண்பர்களின் கல்லூரிக் கால நினைவலைகள்..நமக்கோ சிரிப்பலைகள் அதிரடி அடிதடி நாயகர் விஜயோ அதிரடி சிரிப்பொலி நாயகராகச் சிறப்பாக நடித்தது.

 மெரீனா-சென்னை மெரீனா கடற்கரையே கதைக்களம்...சிவ கார்த்திகேயன் – ஓவிய காதல் ஜோடிகள் மற்றும் சுண்டல் விற்கும் சிறுவர்கள் என்று படம் நேரம் போவதே தெரியாது பாண்டிராஜ் இயக்கத்தில் சிரிப்பூக்களின் கதம்பம் 

  காதல் பிசாசு-அரவித்-மிதுனாவுடன்  சந்தானம் நடிப்பில் வந்த படம்.சிலர்  நடிப்பால் சிரிக்க வைப்பார்கள் சிலர் கடிப்பால் சிரிக்க வைப்பார்கள் ஆக “கடி சிரிப்புப் படம் சிரிக்கலாம் என்று போய் அழுதவர்களும் உண்டு தலைவலியில்...

  ஒரு கல் ஒரு கண்ணாடி-உதயநிதி ஸ்டாலின்,ஹன்ஷிகா,சந்தானம் கூட்டணியில்....
ஒரு நகைச்சுவை படம்.சந்தானத்தின் துணையுடன் உதயநிதி தனது காதலியின் திருமணத்தை நிறுத்த பாண்டிச்சேரி செல்வதே படத்தின் கதை.சந்தானத்துக்கு ஒரு கலக்கல் காமெடிப்படம்  


 கலகலப்பு-விமல்,சிவா,அஞ்சலி,ஓவியா இவர்களுடன் சந்தானத்தின் அளப்பற காமெடி.இயக்கம் சுந்தர்.சி.கும்பக்கோணம் மசாலா கபேயில் திக்கான நகைச்சுவை காபி குடித்த உணர்வு.படம் உம்மனாம் மூஞ்சிகளையும்  சிரிக்கவைக்கும்.



 மதுபானக்கடை- கமலக்கண்ணன் இயக்கத்தில் குடிமகன்களின் கொண்டாட்டத்தையும் திண்டாட்டத்தையும் ரபீக்-ஐஸ்வர்யா புது முகங்கள் மற்றும் நிறைய கதாப்பாத்திரங்கள் நடிப்புடன் சுவைபடச் சொன்ன நகைச்சுவை போதைப் படம். 



 சக்கரவர்த்தி திருமகன்- சிலபேர் படத்தில் நடித்துச் சிரிக்கவைப்பார்கள் ..இது எம்.ஜி.ஆர்.சிவா.... அவரே நடித்து அவரே சிரித்துக்கொண்டார் இது ஒரு ச்சீ...ரிப்பு படம்...?


 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்-நிறைய புதுமுகங்கள் சிரிப்பு உலகின் புதிய சக்கரவர்த்திகள்.இப்படம் தமிழ் திரையுலகின் நகைச்சுவை புத்தகத்தில் காணாமல் போன நடுவில கொஞ்சம் பக்கங்கள் கிடைத்துவிட்ட திருப்தி.சிலபேர் முகத்தைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.அது விஜய் சேதுபதிதான். 

லொள்ளுதாதா பராக் பராக்-தீபாவளிக்கு வந்த படங்களின் அதிரடித்தாக்குதலில் நசுங்கிப்போன இப்படம் மன்சூர் அலிகான் நடித்தது..அவராவது சிரித்தாரா...? அவரிடம்தான் கேட்கவேண்டும்

 



                                          இவைகள் நகைச்சுவை என்று முத்திரை குத்திக்கொண்டு திரைக்கு வந்தவைகள் ... 

இவர்களில் நிறையபேர் நம்மை சிரிக்கவும் வைத்தார்கள் அவர்களில்...


       ..................................பரிதி.முத்துராசன் 

 

 2012 சினிமா-நல்லா சிரிக்கவச்சது யாரு...?



வாக்களித்த அனைவருக்கும்நன்றி முடிவு-21/01/2013
**********************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1