google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம்-நடந்தது என்ன?நிஜம்!

Monday, January 28, 2013

விஸ்வரூபம்-நடந்தது என்ன?நிஜம்!


விஸ்வரூபம் திரைப்படத்தில்  கமல் ஏன் தீவிரவாதம் பற்றியக்  கதையைத் தேர்ந்து எடுத்தார்? ஒரு சமுதாயத்தை இழிவு செய்யவேண்டும் என்ற நோக்கமா?
தீவிரவாதம் பற்றி விஸ்வரூபம் படம் எடுக்கக் காரணம் கமலஹாசனின் வெறி....? கலைவெறி !
கலைத்தொழில் மீதுள்ள அவரது தீவிரவாதம்!


புதிய தொழில்நுட்பமான ஆரோ-3D ஒலி வடிவத்தை அவர் அறிய நேர்ந்த போது அவருடைய கலைவெறி இந்த கதையை தேர்வு செய்ய வைத்துவிட்டது.அது இந்த அளவுக்கு அவரை சிக்கலில் கொண்டு விடும் என்று நினைக்கவில்லை. 

உலகில் இந்தத் தொழில் நுட்பத்தில் விஸ்வரூபத்துக்கு முன்பு 
வெளிவந்தவைகள் இரண்டு படங்களே
அதிலும் Red Tails-திரைப்படம் முழுக்க முழுக்க யுத்த திரைப்படம் இரண்டாம் உலகப்போரில் தரைவழி வான்வெளி பங்கு பெற்ற ஆபிரிக்க அமெரிக்க விமானிகளில் ஒரு Tuskegee  குழு மற்றும் அவர்களின் பயிற்சி திட்டம் பற்றிய யுத்தக்காட்சிகள் விமானங்களின் யுத்த பயிற்சிகள் சித்தரிப்பு அதன் அதிநுட்ப ஆரோ-3D ஒலிவடிவத்தில் அந்தத் திரைப்படம் வெற்றிப் பெற்றது 



இரண்டாவது படமான Rise of the Guardians படமும் வெற்றிப்படமே அதிலும்
ஆரோ-3D ஒலிவடிவம் பயன் படுத்த கதையும் William Joyce's The Guardians of Childhood-அடிப்படையில் உருவான 2012 அமெரிக்க 3D கணினி அனிமேட்டட் கற்பனை-சாகச படம்.




இதில் முதல் படமான Red Tails-யுத்த திரைப்படத்தின் அதீத வெற்றி அவரைப்  பாதித்திருக்கலாம் அதுவே உந்துசக்தியாக இன்றைய அமெரிக்க-ஆப்கானிஸ்தான் நிகழ்கால நிஜப் போராட்டத்தை எடுக்கத் தூண்டியிருக்கலாம் அது (ஆப்கான் ஆதரவு அல்லது அமெரிக்க எதிர்ப்பு) இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள நாடுகளில் விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பாக உருவெடுத்துவிட்டது 

நல்லவேளை அவர் ஈழப்போராட்டத்தையோ விடுதலைப்புலிகளையோ இதுபோல் எடுத்திருந்தால் (இந்தியாவில் அதை இந்திய தனிக்கத்துறை அனுமதித்திருக்காது)அந்தப்படமும் பிரச்சனையானதாக மாறியிருக்கும் அதுவும் தமிழ்நாட்டில் ஆதரவு-எதிர்ப்பு என்று அரசியலும் நுழைந்திருக்கும் 
புதிய தொழில் நுட்பத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப் படுத்தவேண்டும் என்ற அவரின் அதீத ஆசையே அவர் இந்த கதையை தேர்ந்தெடுக்க வேண்டியதானது மற்றபடி எந்தச் சமுதாயத்தையும் அவருக்கு இழிவு படுத்தும் நோக்கமல்ல 
விஸ்வரூபம் கதைக்களத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை ஆயினும் மதவிசயத்தில் (இஸ்லாமியர்கள் மட்டுமல்ல) அனைத்து மதவாதிகளும்  ஓன்று சேர்வதிலும் எதிர்ப்பதிலும் முன்னணியில் இருப்பார்கள் என்பதை பகுத்தறிவாளரான  அவர் அறியாதது ஆச்சரியமே!

இந்திய முதல் சுதந்திரப்போராட்டம் வெள்ளையர்களை எதிர்த்து சிப்பாய் கலகம் உருவாகக் காரணமே ராணுவத்தில் இதுபோல் மதஉணர்வை இழிவுபடுத்திய  சம்பவம் என்று சரித்திரத்தில் படித்த ஞாபகம் அதையும் கமலஹாசன் அறியாதது ஆச்சரியமே!

நமது கருத்துக்கணிப்பில் விஸ்வரூபம் தடைசெய்தது நியாயமில்லை என்றே அதிக வாக்குகள் பெற்றபோதிலும்..............
இந்திய தனிக்கத்துறை விஸ்வரூபத்தை அனுமதித்தாலும் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க மாநில அரசுகள் அனுமதிப்பதும் தடைசெய்வதற்கும் உள்ள உரிமையை யாரும் மறுக்க முடியாது எந்த நீதிபதி படத்தைப் பார்த்தாலும் மாநில அரசை எதிர்த்து செய்வாரா..? சந்தேகமே!

ஒரு திரைப்படம் இந்தியாவில் சிலமாநிலங்களில் வெளியாவதும் சில மாநிலங்களில் தடை செய்யப்படுவதும் புதியதல்ல.நஸ்ருதீன்ஷா-சரிகா நடித்த  பஜானியா(Parzania)-வும் பல விருதுகள் பெற்ற Firaaq குஜாரத்திலும்   அமிதாப் நடித்த Aarakshan படம் உ.பி.யிலும் இன்னும் இதுபோல் நிறைய படங்கள் உள்ளன
 


 உலகிலேயே சினிமா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடே சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத்தெரியாத  இனம் தமிழ் இனமே....இங்குதான் சினிமாவில் வள்ளலாக நடித்தவர்  முதல்வராக முடியும் 
ஒரு கதாநாயக நடிகர் நினைத்தால் ஆட்சிமாற்றமே கொண்டுவர முடியும் அது அறிவு வளர்ச்சியா? அறிவு வீழ்ச்சியா? இத்தகைய சிறப்புவாய்ந்த தமிழ் சமுதாயத்தில் விஸ்வரூபம் போன்ற அறிவுஜீவி படம் எதுவும் செய்யலாம்.  

இங்கே ஒரு முடிவுக்கு வருவோம்............ 

நவீன தொழில் நுட்பம் மேல் உள்ள தீவிர பற்று காரணமாகவே கமலஹாசன் அவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்துக்குத் தீவிரவாதம் பற்றிய கதையை எடுத்துக்கொண்டார் என்றும் அவருக்கு உண்மையில் மனதளவில் சிறு கடுகளவு கூட எந்த மதத்தின் மீதும் இழிவுப் படுத்தும் நோக்கமில்லை என்றும் முடிவுக்கு வரலாம் 

அதனால் கமலஹாசனே கொஞ்சம் இறங்கி வந்து சில காட்சிகளை நீக்கிவிட்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விஸ்வரூபத்தை திரையிடலாம் அவரும் அந்த நோக்கத்தில்தான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்று நினைப்போமாக! 
கடைசி செய்தி-உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு ...
அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேச கமலஹாசனுக்கு உத்தரவு 

                          ............................பரிதி.முத்துராசன்
கடைசியாக ஓன்று சொல்கிறேன் ...........மிக பலமிக்க யானையை அங்குசத்தால்  அடக்கிவிடுகிறான் மனிதன் ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால் அது பாகன் என்றுகூட பார்ப்பதில்லை  
இன்னும் ....சில அழுக்குச்சட்டைகள்

*****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1