google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அமீரின் ஆதி-பகவன்-ஜெயம் ரவியின் அதிரடி கலக்கல்

Saturday, February 23, 2013

அமீரின் ஆதி-பகவன்-ஜெயம் ரவியின் அதிரடி கலக்கல்


அமீரின் ஆதி-பகவன்- 

விமர்சனம் என்ற பெயரில் இப்படத்தின் கதையை எழுதினால்...அப்புறம் நீங்கள் படம் பார்க்கும் போது நிறையத் திருப்பங்கள்  நிறைந்த (எனக்கே திரும்பி திரும்பி கழுத்து சுளுக்கிக் கொண்டது)   இப்படத்தின் சுவராசியம்  குறைந்துவிடும் 

 உலகத்தரத்தில் படம் எடுக்க வேண்டும் என்ற அமீரின் ஆதங்கம் ஒவ்வொரு காட்சியிலும்  இப்படத்தில் தெரிகிறது(அதற்காக அமீர் சார்..படத்தில் தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம்,...இப்படி எல்லா மொழிகளையும் கலந்தால் ... உலகத்தரம்ஆகாது..
நல்லவேளை குஜாரத்தி,பஞ்சாபி..பிரெஞ்ச்,கொரியன்,..விட்டுவிட்டீர்கள்) 


ஆரம்பமே அமர்க்களம் ஆந்திர கல்குவாரி பினாமி கொள்ளையர்களிடம்  ஜெயம் ரவி(ஆதி)சிபிஐ அதிகாரி வேடமிட்டு ரெய்டு நடத்தி கொள்ளை அடித்துசெல்லும்   காட்சி...(இது கந்தசாமியிலிருந்து சுட்டது இல்லை) புதுமையாகத் தெரியாவிட்டாலும் படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டுகிறது.வித்தியாசம்.விறுவிறுப்பு.




























அடுத்துத் தாய்லாந்தில் வில்லன் பாபு ஆண்டனிக்கு பேசும் பொம்மை..?(சஸ்பென்ஸ்) பரிசளித்து விட்டு கொள்ளையடித்த பணத்தில் பங்குபோடும் காட்சியும் இதுவரை எந்த ஆங்கிலப்படங்களிலும் காணாத காட்சி..அருமை

அப்படியேப் போய் கொண்டிருந்தால் என்னாவது என்று பார்வையாளர்களைத் தாய்லாந்தில் அம்மா-தங்கை செண்டிமென்ட காட்சிகள் தங்கையின் காதலனை போட்டுத் தள்ளுவது  ..ஜெயம் ரவி நீத்து சந்திராவுடன் காதல் செய்வது... கதையை ஜவ்வாக இழுத்து...(காமெடி நடிகர்கள் யாரையாவது போட்டு கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கலாம்)அவ்வவவ்...தூக்கம் உன் கண்களைத்  தழுவட்டுமே...என்று தாலாட்டும் போது...திடீர் திருப்பம்...?

மும்பாய்...பகவான் ஜெயம் ரவி..படத்தின் விறுவிறுப்பு மீண்டும் ஆரம்பம்
கதாநாயகி நீத்து சந்திரா கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி இல்லை ஆனால் கதைக்கு ஏற்ற கதாநாயகி ...(பெண் தன்மை கொண்ட ஆணை காதலிக்கும் பெண் மும்பாய் ராணி..திருநங்கையை காதலிக்கும் நங்கை?..  கதாபாத்திரம்) நன்றாகவே நடித்திருக்கிறார் 
ஆதியை காதலிப்பது போல் தந்திரமாக மும்பைக்குக் கடத்தி வந்த பிறகு கதை இந்திப் படம்போல் (நிறைய இந்தி வசனங்கள்) சூடு பிடிக்கிறது இன்னொரு ஜெயம் ரவி -பகவான்(பெண் தன்மை கொண்ட ஆண்-திருநங்கை?)வேடம் ஜெயம் ரவி அசத்தியுள்ளார் 


ஆதி....தாதா பகவானுக்குப் பதிலாக போலிஸ் என்கவுண்டர் பலிகடா..(இங்கே அமீரின் போலி என்கவுண்டர் பற்றிச் சமுதாய அக்கறை தெரிகிறது) மீண்டும் முதலில் வந்த ஆந்திரா பினாமிகள் ஜெயம் ரவி-ஆதியுடன்  சண்டை (தமிழ்நாட்டு குவாரி கொள்ளையர்கள் என்றால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் காட்டவேண்டும் எதற்கு வம்பு என்று அமீர் நினைத்ததில் தப்பில்லை இன்னொரு விஸ்வரூபம் பிரச்சனை இங்கே அரசியல்ரூபத்தில் வந்திருக்கும்) 

'கதக்'கமல் விஸ்வரூபம் எடுத்துச்  சண்டை போடுவதுபோல்..பகவான் என்ற ஜெயம் ரவி   ஆதி என்ற ஜெயம் ரவியுடன்போடும் சண்டைக்காட்சி ஹாலிவுட் படங்களுக்கு நிகரானது ...ஆக ஒருவழியாக வில்லன்களைப் பகவான் உட்பட அழித்துப் படம் முடிகிறது..பார்ட்-II வராது என நம்புவோமாக....ஜெயம் ரவியின்  இரு வேறுபட்ட நடிப்புக்காக....அமீரின் ஆதி-பகவன் பார்க்கலாம் -
அமீரின் ஆதி-பகவன்-ஜெயம் ரவியின் அதிரடி கலக்கல்    


(அமீர் சார்..நீங்க ரொம்ப நல்லவருங்க...தடை விளம்பரத்தை தவற விட்டுவிட்டீர்கள் இல்லையேல் அம்புட்டு காசையும் அள்ளியிருக்கலாம்)

கதை-(யாருகிட்டேயும் சொல்லாதீங்க அப்புறம் சஸ்பென்ஸ் போயிடும்)போலிஸ் என்கவுண்டரிலிருந்து தன் காதலன்-தாதாவை காப்பாற்ற அவரது காதலி அவர் சாயலில் தாய்லாந்தில் உள்ள ஒருவரை தேடிபிடித்து மும்பாய்க்கு அழைத்துவருவது...இடையில் சுவராசியமான காட்சிகள்... மற்றபடி ஒலி-ஒளி சொல்லுபடி இல்லை.............மீதியை வெள்ளித்திரையில் காண்க
ஒரு வரியில் சொன்னால்...அமீரின் ஆதி-பகவன்
 தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம்,தாய்,...மொழிகளின் கூட்டு..பொரியல்.
தயாரிப்பாளருக்கு மொழி மாற்றம் (டப்பிங்)செலவு வைக்காமல் இந்தியாவில் எங்கு வேடுமானாலும் அப்படியே திரையிட அமீரின் அய்டியா...மேற்படி மொழிதெரியாதவர்கள் அணைத்து மொழி அகராதி யுடன் செல்வது நல்லது     
  
                                             thanks-YouTube-geminiaudio

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1