நீதி நித்திரை கொள்ளாது!
நியாயத்துக்கு மரணமில்லை!
அநியாயம் அதிக நாள் ஆட்சி செய்யாது!
அக்கிரமத்துக்கு நீண்ட ஆயுள் இல்லை!
நீ குண்டூசியால் குத்தினால்....
கடப்பாரையால் காயப்படுவாய்!
நீ விஷ வித்துக்களை விதைத்துச் சென்றால்....
வேதனையைத்தான் அறுவடை செய்வாய்!
பிறக்கும் போது மனிதனாகப் பிறக்கிறாய்...
வளரும் போது ஏன் மதவாதியாக மாறுகிறாய்...?
சாகும் போது ஏன் மதவெறியனாக மடிகிறாய்...?
உன் கடவுளுக்கும் களங்கம் செய்யலாமா...?
மதத்தை மறந்துவிடு! மனிதனாய் வாழ்ந்துவிடு!
வெடித்தது எந்த மதம்...? என்ற கேள்வி இங்கே எதற்கு...?
துடித்தது மனித இதயம் மடிந்தது மனிதாபிமானம்
நீ வைக்கும் வெடிகுண்டில்
உன் கடவுள்கூட காயப்படலாம்
ஒ..மதவெறி மனிதா!
நாளை உன் கடவுள் காணாமல் போகலாம்
....................பரிதி.முத்துராசன்
****************************************************************************
கீச்சர்களிடம் கடவுள் படும் பாடு....
கவின்
@Muthukkavin
இருநூறு வருட அடிமைத் தனத்திற்கே ஆங்கிலத்தை விட முடியவில்லை. ஈராயிரம் வருட அடிமைத்தனம் கடவுள். மிகக்கடினம்.
இளந்தென்றல்
@Elanthenral
வந்தியத்தேவன்
@kalasal
இதுவரை உலகில் நிறைய இரத்தம் சிந்தப்பட்டதற்க்கு காரணம் கடவுள்களும், மதங்களும் தான்!
கனவே
@kanavey
அதிக பணத்தை லஞ்சமாக வாங்கிக்கொண்டு ஸ்பெஷல் தரிசனம் தரும் கடவுள் மீது நடவடிக்கை எடுத்தால் - "கடவுள் இருப்பார்" #உள்ளே!
kavirajan
@kavi_rt
என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் கடவுள். இது கூடத்தெரியாத நீர் என்ன கடவுள்? #எப்போதோ படித்தது
Don Ashok
@thedonashok
சாத்தானின் செயல்களாக மதங்கள் கூறும் அத்துணை விசயங்களையும் மனிதன் தத்தமது கடவுள்களின் பேராலேயே செய்திருக்கிறான்!
வில்சன்
@Tubelighd
பிச்சைக்காரன் தன்னை நம்பி வெளியிலே நின்றுவிடுகிறான், மற்றவனெல்லாம் கடவுளை நம்பி உள்ளே செல்கிறான்
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
வலியான் வெல்கிறான்.மெலியான் ஒடுக்கப்படுகிறான்.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதற்கு கடவுள் எதற்கு?
தமிழன்பன்
@tamizhanban08
மதங்களும் கடவுள்களும் பிறப்பதற்கு முன்னர் மனிதன் சுதந்திரமாக சிந்தித்திருப்பான்.
இக்பால் செல்வன்
@iqbalselvan_
பேய்கள், பூதங்கள் இல்லை எனத் தெரிந்தாலும்,கதைகளில் அவை சுவாரசியம் தருபவையாகவே உள்ளன, கடவுளும் கூட...
குணா யோகச்செல்வன்
@g4gunaa
அதிகப்பிரசங்கி
@Athikapprasanki
நாயோன்
@writernaayon
கடவுளின் சக்தியை வியக்கிறேன். சிறிதளவு திருநீறு பூசிய உடனே தீயவனை நல்லவனாக்குகிறார், வெளியுலகிற்கு!
மெதுனன்
@imdganesan
மக்களை மயக்க நிலையில் வைக்க அரசுக்கு பயன்படும் போதை வஸ்துகள்தான் மதம், சினிமா மற்றும் மது.
நறுமுகை
@IamMeeru
எல்லா குழந்தைகளும் இயற்கை மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.அவர்களின் பெற்றோர்தான் மதம் சார்ந்தவர்களாக்குகிறார்கள்!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |