google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அம்மா-தெரியாத சில உண்மைகள்...!

Sunday, February 24, 2013

அம்மா-தெரியாத சில உண்மைகள்...!


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அம்மா பற்றி சில உண்மைகள் 
அம்மா அவர்களுக்கு இரண்டு வயதாக இருக்கும் போது அவரது தந்தை ஜெயராம் இறந்துபோனார்.

மகாராஜா ஜெய சாம ராஜேந்திர உடையாருக்கு அம்மாவின் தாத்தா வைத்தியராக, நம்பிக்கையானவராக இருந்தார் அதனால் அவர் பரம்பரைக்கு அவரது நினைவாக ஜெய(வெற்றி)என்ற பெயரை இணைத்து வைப்பது பழக்கமானது.

அம்மா நடித்த முதல் படம் (Epistle) 1961 இல் வெளிவந்த ஆங்கில மொழி திரைப்படம், 15 வயது இருக்கும் போது அவர் Chinnada Gombe (1964) இல், கன்னடம் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக அறிமுகமானார்





அம்மா இந்தியில் தர்மேந்திரா ஜோடியாக நடித்த படம் இஜத்,
அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் 1980 ல் வெளியான நதியை தேடிவந்த கடல்  

அம்மாவின் முதல் பேச்சு பெண்ணின் பெருமை 1983 ஆம் ஆண்டு,அதிமுக அரசியல் மாநாட்டில் பேசியது அவரை அதிமுக கட்சி பிரச்சார செயலாளர் ஆக்கியது 

அம்மா முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு பெண் முதலமைச்சர் மட்டுமல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம்வயது தமிழ்நாடு முதல் அமைச்சரும் ஆகும் 

உலகிலேயே முதன்முதலாக தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண் சிசு படுகொலையை தடுத்த தாயுள்ளம் கொண்டவர் 

இப்படி நிறைய அவரது பெருமைகளை சொல்லிக்கொண்டு போகலாம்........





























அவரது சமீபத்திய உலகளாவிய சாதனை இப்போது பரிசோதனை முறையில் சென்னையில் திறக்கப்படுகின்ற (ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி)அரசு மலிவு விலை உணவகங்கள் 

இன்று அம்மாவின் பிறந்தநாளுக்கு இது சிறப்பு பதிவு....நன்றி 

                           ................பரிதி.முத்துராசன்  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1