google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழ் சினிமாவின் (தலை)விதிகள்?(பகுதி-2)

Monday, February 25, 2013

தமிழ் சினிமாவின் (தலை)விதிகள்?(பகுதி-2)


சிறந்த திரைப்படத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்ற இரண்டாவது முக்கிய விதி........ 
2. சுயமானத்தன்மை(ORIGINALITY)-
கதை வசனம்,கதையமைப்பு,காட்சி அமைப்பு,அணுகுமுறை,கலையுணர்வு,கேமரா வேலை,உந்துதல்,குறிப்புகள்,...இப்படி நிறைய அடங்கும் 
இங்கே ஒரிஜினாலிட்டி என்றதும் வேறு படத்தைக் காப்பியடிக்காமல் எடுப்பது என்பதல்ல 

சினிமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உலகின் பல மொழிகளிலும் பல்வேறு கதைகள் திரைப்படமாகப் புதிய தொழில்நுட்பத்துடனும் வந்துள்ளது வந்துகொண்டிருக்கிறது அத்தனையும் ஒரிஜினாலிடியாக இருக்கவேண்டிய அவசியமில்லை ஒரு படத்தின் சுயமானத்தன்மை அதன் இயக்குனரின் அணுகுமுறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.   

எப்படிக் கிளி ஜோதிடர் பத்து அதிஷ்ட அட்டைகளை வைத்துக்கொண்டு பலநூறு பேருக்கு...ஜோதிடம் பார்க்கின்றவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு திருப்தியாக ஜோதிடம் சொல்லுவாரோ அத்தகைய வேலையைப் படத்தின் இயக்குனர் செய்யவேண்டும் 

முதலில் கிளியை அதிஷ்ட அட்டைகள் எடுக்கப் பழக்கப்படுத்திப் பிறகு(உண்மையில் அவர் படிக்கத்தெரியாதவராகக்கூட இருப்பார்) அட்டை உள்ளிருக்கும்  சாமி படத்திற்குத் தகுந்தவராக ஒரு பழைய புத்தகத்தைப் புரட்டி எதையோ தேடுவதுபோல் பாவனைச் செய்து கிளிசோதிடம் பார்ப்பவர் மனநிலைக்கு ஏற்ப எதையாவது சொல்லி அவரைச் சந்தோசப்படுத்திப் பணத்தைப் பிடுங்குவார்.

எல்லோராலும் இப்படிச் செய்ய முடியாது அதற்கென்று தனித்தன்மை வேண்டும் இங்கே இயக்குனர் கதையிலோ காட்சியிலோ வேறு ஒரு திரைப்படத்தைச் சுட்டதாகக்கூட இருக்கலாம் ஆனால் அவர் அதைத் திரையில் வெளிப்படுத்தும் முறையில் வேறுபட்டால் அத்திரைப்படம் அதன் சுயத்தன்மையை இழக்காது 


















சமீபத்திய திரைப்படம் ஹரிதாஸ் எடுத்துக்கொண்டால் இயக்குனர் குமரவேலன் இந்த வேலையை இப்படத்தில் சிறப்பாகச் செய்துள்ளார்  ஹரிதாஸ் படத்தில் சொல்லப்பட்டஆட்டிசம் குறைபாடு உள்ள கதை மற்றும் கதாப்பாத்திரம் இதற்கு முன்பு தமிழில்சொல்லப்படவில்லை ஆனால் இது போன்ற ஏதேனும் குறைபாடு உள்ளவர்களைப் பற்றிய  படங்கள் நிறைய வந்திருந்தாலும் கதை வசனம்,கதையமைப்பு,காட்சி அமைப்பு,.....போன்றவைகள் தனித்துவமாக இருப்பதால் இப்படம் சிறப்பான படமாக அமைந்துள்ளது.

வில்லன் ஆதியாக நடித்துள்ளவர்(பிரதீப் ராவத்) அப்படத்தில் பெரிய வில்லத்தனங்கள் செய்வதாகக் காட்டப்படவில்லை ஆனாலும் நடிகர் தேர்வு அவர் ஒரு பயங்கர வில்லனாகப் பல தமிழ் படங்களில்(கஜினி) நடித்திருக்கும் நடிகர் படத்தின் கதைக்குத் தீவிரத் தன்மையை அதுவே சொல்லாமல் சொல்கிறது இல்லையேல் கதை ஆட்டிசம் தண்டவாளத்திலிருந்து தடம் மாறி என்கவுண்டர் தண்டவாளத்துக்குத் தாவும் நிலை வரும்....தடம் பிரளும் அபாயம் 

கதைவசனம் ஹரிதாஸ் படத்தில் அதிகமாக வந்தாலும் அது தேவையானதாக உள்ளது  யூகி சேது பேசும் வார்த்தைகள் அத்தனையும் அருமை...‘டாக்டர் கோச் மாதிரி பேசறார், கோச் டாக்டர் மாதிரி பேசறார்’

காட்சியமைப்புப் படத்தின் கதையை ரயில் இஞ்சின் போன்று அழகாக இழுத்துச் செல்கிறது சிவதாஸ்(கிஷோர்) தாயார் இறந்து போன காட்சி..பிசைக்காரர்களிடமிருந்து காணாமல் போன தன் மகனை (ஹரிதாஸ்)கண்டுபிடித்துப் பிடுங்கியதும் தட்டில் நூறு ரூபாய் போடுவது...அமுதவல்லி (சினேகா) டீச்சர் பாடம் நடத்தும் போது கிஷோரைப் பார்த்து கூச்சப்படுவது...பல்பொருள் அங்காடியில் சிறுவன் ஹரிதாஸ் பாட்டிலை தள்ளி உடைக்கும்போது நெஞ்சை வருடும் நிகழ்வு  இப்படி நிறையக் காட்சிகள் கதாப்பாத்திரங்களின் தன்மையைச் சொல்வது இப்படத்தின் சிறப்பு.  

ரத்தினவேலுவின் கேமரா கதைக்கு உயிரோட்டம் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றிட வைக்கும் வேலை நுணுக்கம்இப்படிப் படத்தின் சுயமானத்தன்மை(ORIGINALITY)யை  ஹரிதாஸ் பலவகைகளில் நிர்மாணித்து அதை ஒரு சிறந்த படமாக்கியது.

மணிரத்தினம் அவர்களின் கடல் திரைப்படத்தின் சுயமானத்தன்மை அப்படத்தின் காட்சியமைப்பு வசனங்கள் ..இப்படி நிறையக் காரணிகள் அப்படத்த்தின் உயிரோட்டத்தைச் சாகடித்தது.

மாற்றான் படம் அதன் கதையோட்டத்திலிருந்து அவ்வப்போது திசை மாறி சிறந்த நடடிகர் சூரியாவின் நடிப்புத்திறமையை வீணாக்கியது.

இப்படித்தான் அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்தில் சந்தானம்-கார்த்தி உட்கதை அத்திரைப்படத்தின் உயிரோட்டமான தேசவிரோதிகளை அழிக்கும் கதையை யாருக்கும் தெளிவுபடுத்தாமல் போனது.

விரைவில் அடுத்தப் பதிவில்.....புதுமை(INNOVATION)-எவ்வாறு திரைப்படத்தின் தலைவிதியை தீர்மானிக்கிறது என்பதைக் காண்போம்...(தொடரும்)       


   
 

....................................................பரிதி.முத்துராசன் 

************************************************************ 

(முதல் விதியைப் படிக்காதவர்களுக்கு....





தமிழ் சினிமாவின் (தலை)விதிகள்?(பகுதி-1) 

******************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1