google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அம்மாவின் இட்லி கடை!

Thursday, February 21, 2013

அம்மாவின் இட்லி கடை!


அடேய்...அறிவுச்செல்வா!
அம்மாவின் உலகளாவிய திட்டம்....
உன்னதமான உண்ணும் திட்டம் 
அரசு மலிவு விலை டிபன் சென்டர் 


திறந்த நாளிலிருந்து 
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
கூட்டமோ கூட்டம் 
நெடும் தொலைவுக்கு வரிசை 
காவலர்கள் கால் கடுக்கக் காவல் 

அட..இத்தனைநாளும் 
இவர்கள் இட்லிக்கு 
ஏங்கிக் கிடந்தார்களோ...?


அய்யோ...பாவம் 
தமிழா! தமிழா!இட்லி தமிழா!
நன்றாகச் சாப்பிடு....
இலை போட்டு சாப்பிடு 
இரட்டை இலை போட்டு சாப்பிடு...
நாளை ஒட்டு போடனும்,மறந்துவிடாதே! 
உண்ட அரசுக்கு ரெண்டகம் செய்துவிடாதே!


(அண்ணேன்....ஒரு டவுட்..டு.
கூட்டத்தைப் பார்த்தா...
காலையில நின்னா...
மதியம்தான் இட்லி கிடைக்கும் 
மதியம் வரிசையில் நின்னா...
நைட்லத்தான் சாதம் கிடைக்கும் 
அப்புறம் எப்போது அண்ணேன்
வேலைக்குப் போறது..?
பேசாம இலவச....அச்சச்சோ...
விலையில்லா இட்லி கடையாக்கிட்டா..?
அடுத்தத் தேர்தல்ல....
அம்புட்டு சீட்டும்  அம்மாவுக்கே)   
 
................................பரிதி.முத்துராசன் 

************************************************************************
சில சுவராசியமான இட்லி கீச்சுக்கள்..........
உடன்பிறப்பே, ஒரு ரூபாய்கு ஒரு கிலோ அரிசி வழங்கிய கழக ஆட்சி எங்கே?? ஒரு இட்லியை ஒரு ரூபாய்கு விற்கும் அம்மையாரின் சர்வாதிகார ஆட்சி எங்கே??
'அம்மா மெஸ்'ஸில் அமோக கூட்டம்.. 2 மணி நேரத்தில் 2000 இட்லி காலி!// அந்த வெண்ணிலா கபடிக்குழு க்ரூப்பை யார்யா உள்ளார விட்டது?


'அம்மா மெஸ்'ஸில் அமோக கூட்டம் 2 மணி நேரத்தில் 2000 இட்லி காலி # 4 மணி நேரத்துல 4000 குவாட்டர் காலியாகுதே அதையும் சொல்லுங்க

"அம்மா மெஸ்" இட்லி, சாம்பார், சட்னி விமர்சனம் வந்துருச்சா "புடிடா மொக்கைல"?

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1