google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உயிரோடு இருக்க உதவுங்கப்பா!

Friday, February 22, 2013

உயிரோடு இருக்க உதவுங்கப்பா!


முன்பெல்லாம் பண்டிகைகாலங்களில் 
வெடி வெடிப்பார்கள்...
அசூரர்கள் அழிந்தார்கள் என்று.
திருவிழாக்களில் வெடி வெடிப்பார்கள் 
சாமி ஊர்வலம் போகும் போது...
வேடிக்கையாக இருக்கும் 
அப்புறம் செத்தவனின் கடைசிப் பயணத்தில் 
அஃது எதற்கு என்று தெரியவில்லை...? 


இப்போதெல்லாம் அடுத்தவனைச் சாகடிக்க 
வெடி வெடிக்கிறார்கள்...
காய்கறி  வாங்க கடைத்தெருவுக்குப் போனாலும்...
கத்தரிக்காயும் வெடிகுண்டாகவே தெரிகிறது...
எப்போ வெடிக்குமோ? இதயம் துடிக்கிறது   


செத்தவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு 
அஞ்சோ பத்தோ அவன் கையில் திணித்துவிட்டு 
மீண்டும் வெடித்தாலும் வெடிக்கும் என்றும் 
உஷாராக எல்லோரும் வீட்டுக்குள்ளே போங்க என்று 
 
அட...போங்கப்பா..புண்ணாக்கு தலையர்களா 
இன்னொரு துப்பாக்கி திரைப்படம் வரும் 
அதைப் பார்த்து தெரிந்துகொள்கிறோம் 
எப்படி வெடிக்காமல் தடுப்பதென்று..
 
இன்னொரு விஸ்வரூபம் வெளிவரும்
அதைப் பார்த்து தெரிந்துகொள்கிறோம் 
எப்படி வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதென்று.. 

அதையும்  நாங்கள் பார்க்க வேண்டும்
அதுவரை நாங்கள் வெடித்துச்  சிதறாமல்.....
உயிரோடு இருக்க உதவுங்கப்பா!

  .....................................பரிதி.முத்துராசன் 

**********************************************************************   
சில கீச்சர்களின் வெடி கீச்சுக்கள்................
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு # நமக்கு நியூஸ், செத்தவனுக்கு வாழ்க்கை, மாநில அரசுக்கு தலைவலி, செய்தி ஊடகங்களுக்கு 2 நாள் பிசினெஸ்

ஹைதராபாத் குண்டுவெடிப்பு ....நெஞ்சுரம் கொண்ட ஆட்சியாளர்கள் தேவை இக்கணம்.....
ஹைதராபாத் குண்டுவெடிப்பு # இந்த "ரா' காரங்க நாங்க அப்பவே சொன்னோம்ன்னு ஆரம்பிப்பாங்களே!!!

ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கு உதவ தயார்:அமெரிக்க வெளியுறத்துறை #பெரியண்ணே நீங்களாவது வந்து உண்மை குற்றவாளிஐ கண்டு பிடிச்சு சொ(கொ)ல்லுங்க !
ஹைதராபாத் குண்டுவெடிப்பு- தீவிரவாதிகளை தண்டிப்போம்: பிரதமர் மன்மோகன்சிங் - போயா போயி புள்ள குட்டிங்கள படிக்க வை....



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1