google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினி-சினிமாவா?வாங்க அசைபோடலாம்!

Thursday, February 21, 2013

ரஜினி-சினிமாவா?வாங்க அசைபோடலாம்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-
இவரைப் பற்றி அசைபோட நிறையத் தீனி இருக்கு .... இவருடைய சினிமா பற்றி அசைபோட்டால்...சினிமா-சமுதாயம்-அரசியல்-ஆன்மிகம்...இப்படி  நிறைய வரும்


நடிகர்களிலேயே யாரும் எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் ஜொலிக்கும் இவருடைய வெற்றிக்கு முன்னாடியும் இவரே- பின்னாடியும் இவரே- மேலேயும் இவரே -கிழேயும் இவரே
ஒரு சாதாரணப் பேருந்து நடத்துனராக இருந்த தனி மனிதர் இன்று ஒரு கலாச்சாரசின்னமாக இந்த நிலைய அடைய அதிஷ்டம் எந்த வகையிலும் காரணமல்ல திறமை -துணிவு-தன்னம்பிக்கை

திரைப்படங்களில் என் வழி தனி வழி என்பார் உண்மையா?பொய்யா?தெரியாது.ஆனால், இவருடைய ஒவ்வொரு அசைவும் சமுதாயத் தாக்கம் செய்யும் இவர் சமுதாயத்தின் ஒர் அங்கம்

இவர் அன்றைய சிறந்த இயக்குனர்கள் செதுக்கிய கலைசிற்பம்
இவர் அபூர்வ ராகங்கள்  படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தாடியுடன் சினிமாவுக்கே இருந்த கவர்ச்சி உருவம் இல்லாமல் இயல்பாகத் தலையைக் கைகளால் கோதிக்கொண்டு நுழையும் போது..அதுவரை பவுடர் பூச்சும் விக்குத் தலைகளையும் திரையில் பார்த்தவர்களுக்குத் திகைப்பாக இருந்தது.அந்த பெருமையைச் செய்தவர் இயக்குனர் பாலச்சந்தர்


ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களாகவே-அவர்கள் படத்தில் வக்கிர கணவனாக...மூன்று முடிச்சு-படத்தில் பெண் பித்தராக...பாரதிராஜாவின் 16-வயதினிலே...படத்தில் கிராமத்து போக்கிரியாக...இப்படி வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் திரையில் வந்துகொண்டு இருந்தார்.

அப்படியே அவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கைகளில் சுமார் 25 படங்களில்தனது அடுத்தப் பரிமாணத்தைக் காண்பிக்க ஆரம்பித்தார்  அவரது புவனா ஒரு கேள்விக்குறி?-திரைப்படம் அவரது இரு வேறுபட்ட நடிப்பை காட்சி படுத்தியது.  அவரது பைரவி முதல் கதாநாயகனாக நடித்த படம் இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில்  ரஜினி நடிப்பும் அவரது காளி கதாபாத்திரமும் பரவலாகப் பேசப்பட்டது.

இப்படி உச்சத்துக்கு வந்த ரஜினி அப்படியே அத்தனை இயக்குனர்களையும் கீழே தள்ளிவிட்டு அவருக்கென்று ஒர் இமேஜ் உருவாக்கினார் அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் ஆக முடிந்தது ம்...ம்...ம்..இவர்மட்டும் ஏற்றிவிட்ட ஏணிகள் என்று  இயக்குனர் நடிகராக இருந்திருப்பாரேயானால் ..அய்யோ..பாவம் அப்பொழுதே அவர்கள் எதையாவது  படம் என்று எடுத்து இவரையும் கீழே தள்ளியிருப்பார்கள்


இயக்குனர்களிடமிருந்து விலகி இவருக்கென்று தனிப்பட்ட  கதை-இவருக்கென்று ஒர் (அறிமுக) பாடல் -இவருக்கு ஏற்ற கதாநாயகிகள்-இவருக்கு ஏற்ற வசனங்கள்....இப்படி எல்லாமே தனக்கென்று வடிவமைத்துக் குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைத்துக்கொண்டதால் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம்














































அதுதான் ஆரம்பத்தில் சொன்னேன்-இவருடைய வெற்றி-இவருடையதே!-இவருடைய...  திறமை -துணிவு-தன்னம்பிக்கை

சூப்பர் ஸ்டார் பற்றி எழுத ஆரம்பித்தால்...இந்த ஒரு பதிவு போதாது இதற்கு முன்பு

ரஜினி-பிரபலங்களில் ஒரு மாமனிதர்!

என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் எனவே அவ்வப்போது அவரது அவரது வெற்றியின் ரகசியங்களை ஆய்வு செய்வோம்...

ஆங்.... அவரது பஞ்ச் பற்றிச் சொல்ல மறந்திட்டேனே...
பஞ்ச்...வசனங்கள் தமிழ் திரையுலகில் புதுசல்ல ...அது பாகவதர் காலத்திலேயே உண்டு.... அவர்கள் பாடல்களிலேயே பஞ்ச அடிப்பார்கள்
ராதே..உனக்கு கோபம் ஆகாதடி...மன்மத லீலையை வென்றார் உண்டோ? இப்படிப் பத்துதடவ ஒரே பாட்டிலேயே சொல்லி சொல்லி அந்த காலத்தில் பிரபலமாக இருந்தார்கள்
மதுரைவீரன் படத்தில் அப்பன் மவனே அடிப்பியா...?சிங்கம்டா...என்று   NSK-குருப் அடிக்கும் பஞ்ச்ஜோக் பிரபலம் வீரப்பா-வின் சபாஷ்.. சரியான போட்டி..! எல்லோருக்கும் தெரியும்.இப்படிப் போகும் பஞ்ச் வரலாற்றில் பஞ்ச் தந்தை என்றால் அது சூப்பர் ஸ்டாரையே சேரும்இவருடைய....இது எப்படி இருக்கு...? முணுமுணுக்காதவர்கள் இல்லை  எல்லோரும் பேசலாம்  ஆனால் அஃது அவர் பேசினால் மட்டுமே அர்த்தம் உள்ளதாகத் தெரியும் 




thanks-YouTube- by arunan2481989

 வாங்க அசைபோடலாம்!

ரஜினி என்ற இந்த மகத்தான நட்சத்திர நடிகர் இனிமேலும் நடிப்பில் தன்னை வருத்திக்கொள்லாமல்.....நீண்ட ஆயுசுடனும் உடல் நலத்துடனும்  சுயநலமற்ற மாமனிதராக நாட்டு நலனுக்காக அரசியலுக்கு வரவேண்டும்  அல்லது நல்ல ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்  அதுவே நமது விருப்பம்...     

(இவரிடம் நமது பஞ்ச் வசனம் பஞ்சராகிப் போகும் என்பதால்...இவரைப் பற்றி அவவப்போது வேறு பதிவுகளில் பார்ப்போம் நன்றி...வணக்கம்) 
  

.......................பரிதி.முத்துராசன் 

  *****************************************************
thanks-YouTube -lodproductions90

****************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1