google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம்-உலகத்தரமா?உபத்திரமா?(சினிமாபட்டிமன்றம்)

Friday, February 08, 2013

விஸ்வரூபம்-உலகத்தரமா?உபத்திரமா?(சினிமாபட்டிமன்றம்)


(எச்சரிக்கை-இது விஸ்வரூபம் சினிமா விமர்சனம் அல்ல இது ஒரு சினிமா நகைச்சுவை பட்டிமன்றம். இப்பதிவு யாருக்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அல்ல.ஆயினும் விஸ்வரூபம்  விசுவாசிகள் இப்பதிவை படிக்க வேண்டாம் மீறி படித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல) 


 பட்டிமன்றம் துவக்கம்-
எனது உயிரிலும் மேலான தமிழ் சினிமா ரசிகர்களே உங்கள் அனைவரையும் எல்லாம் வல்ல அந்தச் சினிமா கடவுள்கள் (நடிகர்கள்) காத்தருள வேண்டுகிறேன் 


Viswaroopam-kamal opening -thanks-SoundCloud
 
இங்கே விஸ்வரூபம் சினிமா உலகத்தரமானதே...? என்று    தங்களது  கருத்துக்களைச் சொல்ல வந்திருக்கும் திரு.கமல்விசுவாசி,திரு.அதிரடி கமலப்பித்தன், திருமதி பேட்டை உலகநாயகி அவர்களும் 

விஸ்வரூபம் சினிமா உலக உபத்திரமே! என்று தங்களது  கருத்துக்களைச் சொல்ல வந்திருக்கும்பட்டிதொட்டி புகழ் திரு.சினிமாசகவாசி,திரு.மாயாவி சினிமா சித்தன்,திருமதி சவுக்குச் சினிமா நாயகி அவர்களும்  தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள் 

 இந்த பட்டிமன்றத்துக்கு வரவேண்டிய நடுவர் திருவாளர் அய்யா நடுநிலை நாயகம் அவர்கள் வயிற்றுப்போக்குக் காரணமாக வரமுடியாமல் போனதால்....
இப்பதிவிவை படிக்கும் நீங்களே நடுநிலையாக இந்தச் சினிமா பட்டிமன்றத்திற்குத் தீர்ப்பு வழங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 

திரு.கமல்விசுவாசி-
எங்கள் உலக நாயகன் எடுக்கும் நடிக்கும் படங்கள் எல்லாமே உலகத்தரம் வாய்ந்ததுதான் விஸ்வரூபம் படம்தான் உலகத்தரம் என்று சொல்வது அறிவற்றது ..இது முழுக்க முழுக்க உலகத்தில் உள்ள அமெரிக்காவிலும்  ஆப்கானிலும் எடுக்கப்பட்டுள்ளதால் விஸ்வரூபம் உலகத்தரம் வாய்ந்ததே!இன்னும் நிறைய இருக்கு...

புதுசு புதுசா துப்பாக்கிகள் காட்டுவார்கள் வெடிகுண்டுகள் வெடிப்பார்கள் புதுசா ச்சீயம்..மா?சிசியம்..மா? என்னலாமோ சொல்லுறாங்க அப்புறம் கையை வெட்டுவாங்க..கழுத்தை அறுப்பாங்க...உலகில் நடப்பவைகளைக் காட்டுவதால்  விஸ்வரூபம்  உலகத்தரம் வாய்ந்ததே!   

திரு.சினிமாசகவாசி-
கமல விசுவாசியின் பேச்சு நகைப்புக்குரியது ..படத்தில் கதக்  கலைஞராக வரும் கமலின் நடிப்பும் அவர் விஸ்வரூபம் எடுத்து தீவிரவாதிகளிடம் போடும் சண்டையும் தவிர...அதுவும் அந்த ஆப்கான் பிளாஸ் பேக் காட்சிகள்  இல்லாமல் படம் எடுத்திருந்தால் கொஞ்சம் தரம் உள்ளதாக இருந்திருக்கும் ...
ங்கொம்மால....தெரியுமா? ..அய்யோ விசுவாசி கோபப்படாதீர்கள் உங்களைச் சொல்லவில்லை  படத்தில் வரும் தமிழ் வசனம்  நல்லவேளை ...தத்தா-வை   விட்டுவிட்டார்கள் ...இதுதான் தமிழை உலகத்தரத்துக்குக் கொண்டு செல்லும் லட்சணமா?


Viswaroopam dialogue -thanks-SoundCloud

 திரு.அதிரடி கமலப்பித்தன்-
எங்கள் உலக நாயகனின் விஸ்வரூபம் ஹாலிவுட் ரேஞ்ச்சுக்கு டைடானிக்-ஜுராசிக்பார்க்-அவதார்  படவரிசையில் நிஜத்தின் பிரதிபலிப்பாக உள்ளதை பொறுக்கமுடியாமல் தடை விதித்து விட்டார்கள்..இது கலாச்சாரப் பயங்கரவாதம் என்று.... 

அதற்குள் அவரது ஒலிபெருக்கியை பிடுங்கிக்கொண்டு  பேசவந்தார்....

திரு.மாயாவி சினிமா சித்தன்-
யோவ்.. ..இப்படி உலகத்தில் எங்கேயோ நடக்கும் அவலங்களையும் தீவிரவாதங்களையும் காட்டுவதற்குச் சில செய்தி தொலைக்காட்சிகள் இருக்கின்றன  இதை காசுகொடுத்து வேறு பார்க்கவேண்டுமா?

இப்படித்தான் எங்கள் ஊரில் உள்ள ஒரு கோயிலில் பல தர்மகாரியங்கள் மண்டபங்கள் கட்டிக்கொடுத்தார் ஒரு பெரிய பணக்காரர் அவருடைய தொழில் என்ன தெரியுமா? அந்த காலத்தில் மதுரையில் இருந்த சில்க் சாராயக்கடைகள் அத்தனையும் அவருடையதே இவரெல்லாம் பெரிய மனிதர் என்று ஏகமரியாதை 

இது கொஞ்சம் கலை நிறையக் கொலை அன்று தொலைக்காட்சியில் ஒருவர் தலையைத் தீவிரவாதிகள் அறுக்கும் காட்சியைக்கண்டு இன்றுவரை கசாப் கடை பக்கம் கூட நான் போவதில்லை எனது இதயம் ரொம்பப் பலவீனமானது  என்னைப்போல் நிறைய இதயங்கள் நாட்டில் உள்ளார்கள் என்று தெரியாதா உலக நாயகனுக்கு? போஸ்டரிலேயே அந்த எச்சரிக்கை வாசகங்களைப் போட்டிருந்தால் திரையரங்கு பக்கமே நான் போயிருக்க மாட்டேன்

பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கு அதைவிடுத்துக் 

கொஞ்சம் கலைநயம் மிச்சம் கொலை நயம் 

அழகை காட்டி ஆபத்து தரும் விலைமாது போல்.... 
விஸ்வரூபம்  சினிமா கலை விபச்சாரம்......


 திரு.அதிரடி கமலப்பித்தன்-
யோவ்..த்தா...மவனே வார்த்தையை அளந்துப் பேசு.....





 Kamal viswaroopam thanks-SoundCloud



திரு.மாயாவி சினிமா சித்தன்-
  யோவ்....உங்கள் உலகநாயகன்  கலாச்சாரப் பயங்கரவாதம் என்று சொல்லும்போது  நான் கலை விபச்சாரம் என்று சொல்வதில் தவறா...? ஆரோ-3d தொழில் நுட்பத்துக்காகவே நான் படம் பார்க்கபோனேன் அந்த மிகப்பெரிய திரையரங்கில்கூட அந்த வசதி செய்யப்படவில்லை இதற்காக நான் அமெரிக்காவுக்கா படம் பார்க்க போகமுடியும்....?




இந்த இடைப்பட்ட கலோபரத்தில் திருமதி பேட்டை உலகநாயகியும் திருமதி சவுக்குச் சினிமா நாயகியும் தங்கள் குடுமிபிடி சண்டையில் மேடையில் மயங்கி விழுந்தார்கள் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டதால் சினிமா பட்டிமன்ற அமைப்பாளர் இத்துடன் பட்டிமன்றம் கலைந்தது என்று அறிவித்துவிட்டு தலைமறைவானார்................


Theme-viswaroopam  thanks-SoundCloud



சரி..அன்பர்களே! நண்பர்களே! நீங்களே நடுவராக இருந்து தீர்ப்பளியுங்கள்......

                                                  ..............................பரிதி.முத்துராசன்  

*****************************************************************************

விஸ்வரூபம் திரைப்படம் உலகத்தரம் வாய்ந்ததா? உலக உபத்திரவமானதா?


முடிவு-15-02-2013 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி!
********************************************************************************
இது அன்றைய களத்தூர் நாயகன்.......................?
                                              thanks-YouTube-goldtreat

இது இன்றைய உலக நாயகன்...........!

                         thanks-YouTube-RaajKamalFilms

**************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1