google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குஷ்பு-நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோமா....?

Thursday, February 07, 2013

குஷ்பு-நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோமா....?



ஏண்டா...அறிவுச்செல்வா!
நம்ம குஷ்பு வீட்டுல
கல்லெடுத்து எறிகிற அளவுக்கு
அப்படி என்னத்தடா...பேசிச்சு?

அந்தப்  பேட்டிய படிச்சா 
குஷ்புக்கு மண்டக் கோளாறா?
படிக்கிறவங்களுக்குக் கோளாறா?
தலையைப் பிச்சிக்கனும் போல இருக்குடா?

தலீவரு வழியே என் வழி 
அப்படின்னு சொல்லிப்புட்டு 
தளபதியா...?
அப்படியினா யாரு?
அப்படியும் கேட்கிறாங்க..?

தலீவருதான் தளபதி 
தளபதிதான் தலீவரு 
அதவுட்டுப்புட்டு.........
தலீவரு இனிதான் பிறப்பாருனா...?
அய்யயோ...
எனக்கும் என்னமோ ஆச்சு போல...?  

என்னடா ஆச்சு குஷ்புக்கு 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமா....?































பாவம்டா....குஷ்பு 
சினிமாவிலும்   நடிக்கத் தெரியல்ல 
அரசியலிலும் நடிக்கத் தெரியல 

எல்லாருக்கும் சனி 
ஏழரை வருசம்னா
இந்த அம்மா நாக்கில  மட்டும் 
பெர்மனன்டா குடியிருக்குதுடா...


(அண்ணேன்...
அவியிங்க பிரபலமானவங்க....
அதிலும் அரசியல்வாதிங்க....
இப்படி ஏதாவது பேசலைனா
இங்கே அவியிங்க இருக்கிறது 
எப்படித் தெரியும் எல்லோருக்கும்...?  

இப்படித்தான் அண்ணேன் 
நீங்ககூட  
கோமாவில் கிடப்பவன் மாதிரி   
பத்து நாளாய் எதுவும் பேசாமல்....
படுத்திருந்திங்கன்னா.......
பாடையைக் கட்டிப்புடுவாங்க....

நாலு நாளா எந்தப் பதிவும் எழுதலையினா 
போயிட்டாருன்னு கதை கட்டிடுவாங்க...)

                              ....................................பரிதி.முத்துராசன் 

****************************************************************************
சில சூடான குஷ்பு கீச்சுக்கள்.......

சரி! இப்பச்சொல்லுங்க. குஷ்பு பாட்டி அப்டி என்னதான் கருத்து சொல்லுச்சு? #நானும் பொதுஅறிவ வளர்த்துக்கணுமா இல்லியா?

குஷ்பு - கோயிலும் கட்றாங்க,கல்லாலும் அடிக்கிறாங்க # விடுறா,விடுறா ஆத்திகன் இருக்கிற ஊர்ல நாத்திகனும் இருக்கத்தான் செய்வான்!!

மானாட மயிலாட நிகழ்ச்சியில மார்க் சரியா போடலைங்கிறதால கல்லெறிஞ்சோம்னு கட்சி ஆட்களை விட்டு சமாளிக்க வேண்டியதுதான்

 *****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1