google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடல்-சினிமா விமர்சனம்

Saturday, February 02, 2013

கடல்-சினிமா விமர்சனம்


அரங்கம் நிறைய ஆர்பரிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட்டம் அத்தனையும் மணிரத்தின் ரசிகர்களா...? பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை ஆயினும் எதையோ எதிர்பார்த்து வந்த கூட்டம்....

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அயிந்து ட்ரைலர்கள் வரப்போகிற படத்துக்கு....முதலில் விஸ்வரூபம் ....அமர்களமான ஆர்பரிப்பு அடுத்து  ABCD பிரபுதேவா நடனம் அடுத்து சேட்டை ட்ரைலர் ஆர்யா-சந்தானம் கூட்டணியினரின் கலக்கல்.........



(எங்கிருந்தோ வந்தது ஒரு குரல் நான் சாத்தான் பேசுகிறேன்...யோவ்..பரிதி கடல் படம் விமர்சனம் எழுதாமல்....வேறு கதை விட்டுக்கிட்டு இருக்க...உன்ன என்ன பண்ணுகிறேன் பார்)


கடல்- நெஞ்சை உருகச்செய்யும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த அருமையான படம் கவுதம் கார்த்திக் சிறுவயது காட்சிகளும் தாயின் மரணமும் அடக்கமும் அதுவும் காலை உடைத்து பெட்டிக்குள் வைக்கும் காட்சி...ஊர்மக்கள் அனைவரும் விரட்டி அடித்தல் (இது எந்த ஊர் மக்கள் படம் முழுக்க யாரையாவது விரட்டி அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்?)

அப்புறம் அவன் வாண்டு சிறுவனாக மாறிவிடுதல் ....இத்துடன் முடித்திருந்தால் நல்ல குறும் படம் பார்த்த நிறைவுடன் வீட்டுக்கு வந்திருக்கலாம் ..படத்துக்கும் நிறைய விருதுகள் கிடைத்திருக்கும் ஆனால் கடல் என்ற பெயரை குளம் என்று மாற்றவேண்டியதாகியிருக்கும்


கடலில் நிறைய நதிகள் கலப்பதுபோல் இங்கு நல்ல நதியாக அரவிந்தசாமியும் கூவம் நதியாக அர்ஜுனும் இருக்கிறார்கள் இருவரும் பாதிரியார் பயிற்சிக்கு வந்தவர்கள் அர்ஜுன் செய்யும் தவறை அரவிந்தசாமி காட்டிக்கொடுத்துவிடுவதால்...அவர் சாத்தானாக மாறிவிடுகிறார் பல கொலைகள் கடத்தல் ஏன் தனது மனைவியைக்கூடக் கொலைசெய்யும் கொடூர சாத்தான்

(சாத்தானின் குரல்-யோவ் பரிதி...இப்படித்தான் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் இன்னும் சொல்லு)  


படம் முழுக்க இதுதான் இருக்கு இன்னும் சொன்னால்....சரி....நல்ல பாதிரியார் அரவிந்த சாமி ஊர் மக்களைத் திருத்தி நல்ல பாதிரியார் பெயர் எடுக்கிறார் ...அர்ஜுன் காயம் பட்டுக் கிடக்கும் போது மறைவிடத்தில் வைத்து காப்பாற்றுகிறார் ஆனால் அர்ஜுனோ சாத்தான் விடுவாரா? பாதிரியார் மேல் பெண் தொடர்பு பலி போட்டு சிறைக்கு அனுப்புகிறார்..















கார்த்திக் மகன் கவுதம் ராதா மகள் துளசி இவர்கள் எதற்கு...? 

(சாத்தானின் குரல்-யோவ்..அவர்கள் தான் கதாநாயகன் கதாநாயகி அவர்கள் இல்லை என்றல் எப்படிப் பாட்டுப் போடுவது?

ஏலே கிச்சன் பாட்டு.. அடியே பாட்டு ரகுமானின் இசையும் ராஜீவ் மேனனின் பதிவும் ஆக அருமையான ஒளியும் ஒலியும் ...கொடுத்தக்காசுக்கு இதுவே சரியாப்போச்சு என்று நினைத்தாரோ மணிரத்தினம்? உண்மைதான்










































இப்படி இந்தக்கடலில் பிடித்தவைகள் கொஞ்சம் உயிர் உள்ள மீன்... மற்றவைகள் நாறும் செத்த மீன் அதுதான் கருவாடு.........

திரையரங்கில் ஆர்பரிக்கும் மாணவர்கள் கூட்டம் என்று ஆரம்பத்தில் எழுதினேன் அல்லவா..ஏதோ கவுதம்-துளசி கிஸ்ஸிங் காட்சி இருக்குனுதான் அந்தக் கூட்டம்போல .. நான் கடைசிவரையில் அந்த காட்சியை கானவில்லை..ஏதோ மெண்டல் காட்சிகள்தான் வந்தது...மாணவர்கள் கூட்டம் முடிவில் திரையில் எழுத்து முடிந்தப்பிறக்கும் திரையையே பார்த்துக்கொண்டு நின்றிந்தார்கள் நான் விட்டால் போதும் என்று ஓடிவந்துவிட்டேன்  

நீங்களும் கட்டாயம் படம் பாருங்கள் திரையில்... போகும்போது கைக்குட்டை எடுத்துப் போங்கள்...கொஞ்சம் கண்ணீரைத் துடைக்க... துளசியைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளு துடைக்க

மணிரத்தினம் அய்யா...என்கிட்ட ஒரு கதை இருக்கு கதைக்குக் காசுலாம் வேண்டாம்..ஜெயமோகன் மாதிரி என் பெயரும் போடவேண்டாம் இந்து-முஸ்லிம்-கிருத்துவ மூன்று மதத்தையும் சேர்ந்தவங்களும் ஓசியில விளம்பரம் செய்ய வைக்கும் அதிரடி ஆக்சன் த்திரிலர் ..நாடெங்கும் சும்மா டமால் டுமீல்னு வெடிக்கும்

இப்ப உங்க படத்தின் கதையை  எனக்குத் தெரிந்த ஒரு கிருத்துவப் பாதிரியாரிடம் தோத்திரம் சாமி என்று ஆரம்பித்து சாத்தான் கதையைச் சொன்னேன் ஒரு கிருத்துவரை இவ்வளவு கொடியவராக காட்டுகிறார்கள் உங்களுக்குக் கோபம் வரவில்லையா என்று  ம்ம் 

அவரோ தடையும் வேண்டாம் வடையும் வேண்டாம் என்பதுபோல் ஒரு ஓரமாய்ப் போய் நின்று கொண்டு... பிதாவே!இவர்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்து அருள்வீராக..ஆமென் என்று என்னையும் என் கழுத்தையும் பார்த்தார் ..நான் சொல்லாமல் ஓடிவந்துவிட்டேன்  
                     .............................பரிதி.முத்துராசன்  

 thanks-YouTube-madrastalkieschannel
*************************************************************
சில கடல் விமர்சன கீச்சுக்கள்...........  

கடல்ல 'அலை' கூட இல்லையாமே? இதுக்கு சிம்புவே தேவல! வஜனம் மட்டுமே டாப்பு.. மூஜிக் கூட சுமார் தானாம். ஒரு இராஜா இரசிகர் விமர்சனம்.

மணி'ன்னதும் கடல் படத்த டைடானிக் ரேஞ்சுக்கு எதிர்பாத்துட்டாங்க போலிருக்கு...புவர் பீப்பிள்'ஸ்

இந்த கடல் பற்றி கொஞ்சம் ஓவராக பேசியதால் என் மூக்கில் அலை அடிக்கிறது #சளி #மணி சார்ர்ர்

வற்றாத கடல் நம்ம டுவிட்டர்கள் புண்ணியத்தால் வற்றிவிட்டது #kadal

இந்தக் கடலில் அலையில்லை ,துளசியில் வாசமில்லை ,மிகவும் எதிர்பார்த்த காட்சி ஒன்று ,படத்தில் இல்லை,மணியிடம் முன்பிருந்த சரக்கில்லை,

கடல் பார்க்க போறேன், எல்லாரும் நல்லா ஆசீர்வதிச்சு வழியனுப்பி வைங்க , அனேகமா படம் எனக்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்

************************************************************************* InfozGuide
 இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....? 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1