google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதலர்தினமும்-இந்து கலாச்சாரக் காவலர்களும்

Thursday, February 07, 2013

காதலர்தினமும்-இந்து கலாச்சாரக் காவலர்களும்


காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-அன்று உலகம் முழுவதும் பிரபலமான கடைபிடிக்கப்படுகின்றது .சமீப ஆண்டுகளில் இந்தியாவில் அதன் புகழ் அதிகரித்து வருகிறது.

மேற்கு நாடுகளின் இந்தக் காதலர் தினம் இந்தியாவில் பழைய பண்பாடுகளுக்கு எதிரானதாக கருதப்படுகிறது இந்து மத காவலர்கள் என்பவர்களால் இந்தியாவில் பல இடங்களில் காதலர்களுக்கு இந்தக் காதலர் தினம் சோதனையும் வேதனையும் தருகிறது.

சமீபத்திய டில்லி பாலியல் தாக்குதல்கூட மேற்கத்திய கலாச்சாரத்துக்கு எதிராகவே நடந்ததாக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது காதலர் தினத்துக்கு எதிராக இப்போதே இந்து மதம் Janajagruti சமிதி (HJS) அமைப்பு வலைதளங்களில் கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டது 





 






























thanks-img-deviantart

இது கலாச்சார காவலர்களின் வாதம்...........
1-காதலர் தினம் கொண்டாடுவது பழமையான நமது கலாச்சாரத்தைப் புதைத்துவிட்டு மேற்கத்தியர்களிடம் அடிமை ஆவதற்கு சமம்.

2-காதலர் தினம் கொண்டாடுவதில் எந்த அறிவியல் மற்றும் கலாச்சார அடிப்படை உண்மைகள் இல்லை 

3-Valentine என்ற கிருத்துவத் துறவி தான் வாழும் காலத்தில் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் தண்டனைப்பெற்றவர் அவர் பெயரில் கொண்டாடப்படும் காதலர்தினம் எவ்வகையில் நன்மை தரும்.

4-இந்நாளில் இளம் ஆண்கள் இளம் பெண்கள் கடற்கரை,பூங்காக்கள்,ஹோட்டல்கள்...போன்ற பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துக்கொள்கிறார்கள் 

5-இந்நாளில் அவர்கள் ஒருவருக்கொருவர் மலர்கொத்து,நினைவுப்பரிசு,வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வது முதிர்ச்சி அடையாத வயதில் இது காதல் அல்ல வெறும் மேம்போக்கான எதிர்பாலியல் ஈர்ப்பு 

6-இந்நாளில் காதல் பரிமாரிக்கொண்டவர்கள் பின்னாளில் திருமணம் செய்துக்கொண்டு மனரீதியிலான துயரங்களைச் சந்திக்கிறார்கள் 

7-இந்நாளில் பயிரிடப்படும் இந்தத் தீயவிதைகள் சமுக அவலங்களையும் சமுதாய சீர்குலைவுகளையும் பயிரிடுகிறது  


இங்கே தமிழ்நாட்டில் உண்மையில் காதலர் தினம் யாரால் ஊக்குவிக்கப்படுகிறது..அதனால் யாருக்கு லாபம்....?
காதலர்தினப் பரிசுப்பொருட்கள் விற்கும் வியாபாரிகளுக்கும் பார்டி நடத்தும் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் இவை எல்லாவற்றையும் விட....நமது தொலைக்காட்சிகளுக்கும் வயிறு நிறையும் 

காதல் தீ அடுத்தவன் வீட்டில் எரியும் போது நாம் வேடிக்கைப் பார்ப்போம் அதுவே நம்ம வீட்டில் எரிந்தால் அலறித்துடிப்போம்.......இதுதான் இங்கே இன்றைய காதல் நிலை

இது காதலர்கள் வாதம்.......... 
மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் காதல் செய்வது தனி மனிதர் சுதந்திரம் முன்னரே பழகாமல் வாழ்நாள் முழுவதும் எப்படி சேர்ந்து வாழ்வது?
உண்மைதான் காதலர்களே! 
உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால்....?
இந்த சுய சுதந்திரம் சுயநல தந்திரமாக இல்லாமல் இருந்தால்....?
காதல் காமமாக மாறாமல் இருந்தால்...?   
அதே நேரத்தில் உலகில் செய்யக்கூடாத அக்கிரமங்களை செய்யும் மதவாதிகள் கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்வது...கேவலம்! 

.............................................................பரிதி.முத்துராசன் 
*********************************************************** 
காணொளி-காதலர் தினத்தன்று காதலர்கள் படும் அவஸ்தை....

           thanks-YouTube-Nexal Bari
*********************************************
இன்றைய தத்துவம்......





















உன்னிடம் ஒரு கருத்து உள்ளது என்னிடம் ஒரு கருத்து உள்ளது நாம் இருவரும் நமது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம் இப்போது நம் இருவரிடமும் இரண்டு கருத்துக்கள் உள்ளது....ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

(அவ்...வவ்வ...பேரறிஞர் பெர்னார்ட் ஷாவும் பெரிய ஜொள்ளுப் பார்ட்டியாகத்தான் இருந்திருப்பாரோ....?) 

************************************************************ 
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....? 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1