google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒ...மதமே! நீ எங்கே போகிறாய்...?

Thursday, February 07, 2013

ஒ...மதமே! நீ எங்கே போகிறாய்...?



ஒ...மதமே! நீ எங்கே போகிறாய்...?
மனிதாபிமானத்தை
புதைத்துவிட்டு............
ஒ...மதமே! நீ எங்கே போகிறாய்..?

நீ நடந்து வந்த பாதையை
திரும்பித்தான் பார்த்தாயா?
அப்பாவிகளின்
சதையும் இரத்தமும்
சாக்கடையாக ஓடுகிறது
இரத்தச் சேற்றில்தான்
உன் பயணம் தொடர்கிறது  


  

 



































ஒ...மதமே! நீ எங்கே போகிறாய்...?
அமைதித் தேடி அலையும்
அப்பாவி பக்தர்களையும் 
தப்பான எத்தர்களாக்கி...  
ஒ...மதமே! நீ எங்கே போகிறாய்?

ஒ...மதமே! நீ எங்கே போகிறாய் ?
எத்தனை வித ஆடைகள் உனக்கு?
எத்தனை வித நிறங்கள் உனக்கு?
எத்தனை வித அடையாளங்கள் உனக்கு?
எல்லாம் இருந்தும் ஒ....மதமே!
நீ அருகில் வந்தால் நாறுது,
உன் மீது வீசுது பிண நாற்றமே! 
(யோவ்....பரிதி! இது ஒரு கேள்வியா?
படம் பார்க்கப் போகிறேன் 
இப்போதெல்லாம் 
நடிகர்கள் கடவுள் ஆகிவிட்டார்கள் 
திரையரங்குகள் 
கடவுள் குடியிருப்பு ஆகிவிட்டன)

                                           .......................பரிதி.முத்துராசன்  

thanks-all images from devianART
*****************************************************************************
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1