google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காணி நிலம் வேண்டும்

Thursday, February 21, 2013

காணி நிலம் வேண்டும்


காணி நிலம்  வேண்டும்
அஃது அடர்ந்த காடாக
இருந்தாலும் பரவாயில்லை..


அங்கே
சிங்கம் புலி கரடி
கொடிய விலங்குகள் 
குடியிருந்தாலும் பரவாயில்லை

இன்னும் கொடிய
ஓநாய் கழுதைப்புலி
ஓலமிட்டு  அலைந்தாலும்
நரியும் பாம்பும் முதலையும்
இருந்தாலும் பரவாயில்லை...










 











அங்கே
மதவெறி  பிடித்த
மனிதர்கள் மட்டும் 
இருக்க வேண்டாம்

மனிதாபிமானத்தை
அபிமானமாய்த் தின்னும்
மூடமனிதர்கள் வேண்டாம்   

யானைக்கு மதம் பிடித்தால் 
அதுவாகவே அடங்கி விடும் 
அங்குசத்தைக் காட்டியும் 
அடக்கிவிடலாம்..........  


மனிதர்களுக்கு  மதம் பிடித்தால் 
எதைச் சொல்லி அடக்குவது....?
எதைக் காட்டி அடக்குவது....?

....................பரிதி.முத்துராசன்  

***********************************************
சில ட்வீட்டர்களின் பகுத்தறிவு கீச்சுக்கள்..........  

மதம் பிடித்த மனிதர்களிடம் தோற்றுப்போனது மதம் பிடிக்காத யானை....  

சக மனிதனால் மதம் புண்படுகிறது என்றால், என்றோ இறந்திருப்பார் என் கடவுள்!

கடவுளை நம்புகிறவர்களே, எங்க சிரிச்சிகிட்டே அமைதியா ஒத்துமையா சொல்லுங்க பாப்போம் "கடவுளும் மதமும் அன்பை மட்டுமே போதிக்கின்றன"

அரசாங்கமும் மதமும் கைக்கோர்க்கும் இடம் எவ்வளவு அபாயகரமானது என்பது இப்பொழுது புரிந்திருக்கும் #Vishwaroopam

அணு உலை அழித்து விடும் என்று அச்சப்படத் தேவையில்லை!#அதற்கும் முன் மதமும் சாதியுமே நம்மை அழித்து விடும் போல!

மதம் மனிதனை மிருகமாக்குகிறது! சாதி மனிதனை சாக்கடையாக்குகிறது! - பெரியார்
உன் மதம், என் மதம் & சிறுபான்மை என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை. எல்லா மதத்தையும், எல்லா கடவுளையும் மறுப்பேன். கிழிப்பேன்

அன்பின் வலியுறுத்துவது தான் மதம்...உலகத்தில் ஒரு கலவரம் கூட மதத்தை தொடாமல் சென்றதில்லை #வரலாறு

அழிக்கவே முடியாதவைகளை படைத்தது மனிதன் தான் #ஜாதி, மதம், பிலாஸ்டிக், கடவுள்...

’கடவுள்’ துகள் கண்டுபிடிப்பு # அப்படியே அவரு என்ன மதம், சாதி / பிரிவு என்பதையும் கண்டுபிடிச்சுடுங்க.

நன்றி-அனைத்து  ட்வீட்டர்களுக்கும் அவர்களது சிந்தனைக் கீச்சுக்களுக்கும் 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1