google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கும்பமேளாவும் கும்மாங்குத்தும்

Tuesday, February 12, 2013

கும்பமேளாவும் கும்மாங்குத்தும்

kumbamela

(எச்சரிக்கை-பதிவுவாசிகளே!இப்பதிவில் எந்த மதமும் எந்த மதநம்பிக்கையும்  சாதகமாகவோ பாதகமாகவோ எழுதப்படவில்லை ஆயினும் நீங்கள் ஒரு மதவாதியாகவோ அல்லது எந்த மத நம்பிக்கைகள்  உள்ளவராகவோ இருந்தால் இப்பதிவை படிக்க வேண்டாம் மீறி படித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல)  

   
இந்த வருட அலகாபாத் (பிரயாகை)கும்பமேளாவில் குளிக்கப் போனதில் கூட்ட நெரிசலில்  இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 36 பக்தர்கள்......


அப்படியென்ன விசேஷம் இருக்கு இந்த ஒருநாளில் 4 மில்லியன் பேருக்கு மேல் ஒரே இடத்தில் குளிப்பதால்....?இது மவுனி அமாவாசை அன்று இந்து மதப் பக்தர்கள் புனித நீராடுதல் இந்த முக்கிய குளிக்கும் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.ஹரித்வார், அலகாபாத், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் சுழற்சி முறையில் இப்போது ஆறு ஆண்டுகள்..அடிக்கடி எங்கேயாவது இந்தத் தீர்த்த யாத்திரை  கொண்டாடப்படுகிறது  

கும்பமேளா பற்றி 629-645 CE இந்தியா விஜயம் செய்த. சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்பேட்டிலும் உள்ளது இந்து மத புராணங்களிலும் இந்தத் திருவிழாபற்றிய குறிப்புகள் உள்ளன

2010-நடந்த கும்பமேளாவில் 70 -லிருந்து 80 மில்லியன் பக்தர்கள் கலந்துகொண்டதே உலகில் அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடிய சாதனை   


மற்ற நாளில் குளிப்பதைவிட இந்த நாளில் குளித்தால் புண்ணியம் 
இந்த கும்பமேளா எங்கு நடக்கிறதோ அங்கே புன்னியத்துக்காகப் புனித நீராட அனைவரும் மொத்தமாக வந்து குவிவதால் பாதுகாப்புச் செய்யமுடியாமல் இந்தக் குளிக்கும் கூத்து உயிரை எடுக்கும் கும்மாங்குத்து  ஆகிறது.

இஃது இன்று நேற்று அல்ல.....கும்பமேளா கதையையும் மக்கள் வாழ்க்கையில் அது போடும் கும்மாங்குத்தையும்   கொஞ்சம் பார்ப்போமா?

 சுதந்திர இந்தியாவில் முதல் கும்பமேளா 1954-ல் 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும்  இந்தக் கும்பமேளாதான் முதல் பலிவாங்கியதாகச் சொல்லப்படுகிறது அன்று இந்த   நாளில் 4.5 மில்லியன் பக்தர்கள் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் கூடியபோது கூட்டநெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 800 பேர் என்றும் இல்லை 350 பேர்கள்தான் மீதி 2000 பேர்கள் காயம்பட்டார்கள் என்றும் அறிவிக்கை விவாதம் அன்று நடந்துள்ளது

அதனால் அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் அரசியல்பிரமுகர்கள் முக்கியப் பிரபலங்கள் யாரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள(கொல்ல)வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்
அன்று நீதிபதி கமலா காந்த் வர்மா தலைமையில் நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு எதிர்காலக் கும்பமேளா சிறந்த மேலாண்மை மற்றும் பாதுகாப்புடன் நடத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது  
 
அதிலிருந்து இப்படி ஒவ்வொரு கும்பமேளாவிலும் இது போன்ற அசம்பாவிதங்கள்  தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.....

தமிழ்நாட்டில்கூடக் கும்பகோணம் ஊரில் இது போன்ற கும்பமேளா நடக்கிறது இப்படித்தான் இங்கேயும் நடந்த ஒரு  கும்பமேளாவில்......

?
?
?
?


(யோவ்...பரிதி! என்ன நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமா...?) kumbamela

இந்த கும்பமேளாவில் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்ட V.I.P ....
ஸ்ரீலஸ்ரீ .....நித்தியானந்த சுவாமிகள்..(நல்லவேளை ஆடை அணிந்துகொண்டுதான் குளித்தார்.பொதுவாக இந்ததிருவிழாவில் கலந்துகொள்ளும் சாமியார்கள் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள்)
போன்ற எந்த குற்றங்களும் செய்யாத அப்பாவி சாமியார்கள் கலந்து கொண்டதுதான் இந்த திருவிழாவின் புனிதம் பற்றி  எனக்கு ரொம்ப பாசம் வருகிறது 

நேரு அறிவிக்கைவிடும் போது முக்கிய மதவாதிகளும் கலந்து கொள்ள (கொல்ல) கூடாது என்று சொல்ல மறந்துவிட்டார்

இந்தத் திருவிழாவில் ரயில்வே கூட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு (கைகளில்) தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தார்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் அறிவிக்கை விட்டார்கள்.

இது போன்ற கூட்டங்கள் கூடுவது இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் இப்படித்தான் எல்லா மத நாடுகளிலும்   இப்படித்தான் 
இவர்களைத் திருத்த முடியாது  பாதுகாப்புக் கொடுக்கவேண்டியது அரசாங்கம்தான்

இது............
 தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் நம்பிக்கை

  
வேண்டுமென்றால் ஓன்று செய்யலாம் அரசாங்கமே இப்படி கும்பமேளா காலங்களில் புனித நீரை குப்பிகளிலும் குடங்களிலும் அடைத்து மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் அதனால் இப்படி ஒரே இடத்தில் மக்கள் கூடுவது குறையலாம் அல்லது பெரிய கோவில்களில் உள்ளதுபோல் டோக்கன் முறையை  அமல்படுத்தலாம் அவர்கள் நம்பிக்கையும் வீணாகாது அரசாங்கத்த்க்கும் இப்படி நிவாரணம் கொடுப்பதிலிருந்து ............லா...ப ....ம்  


                                                        
வாங்க நாட்டாமை அய்யா

சரி.....என்ன பஞ்சாயத்த கூட்டிருக்கிங்க...

அது வந்து சும்மாவே இந்தப் பதிவர் உலகம் மதக்கருத்துகளால் பத்திக்கிட்டு எரியுது...இந்த பரிதினு  ஒரு பதிவர் யாருக்கோ சாதகமாவோ? பாதகமாகவோ? எழுதுறான் ..இப்பதிவை படிக்க வேண்டாம் மீறி படித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல 
ஆனால் இப்படி சொல்லிப்புட்டே எல்லோர் மனசையும் புன்படுத்துறான் என்ன எழுதுறான்...? என்பது மட்டும் புரியமாட்டேங்குது ...
நீங்கதான் தீர்ப்பு சொல்லணும்....?

ஏனப்பா...பரிதி? சும்மாவே நமக்கும் அந்த மதவாதிகளுக்கும் வாய்க்காச் சண்ட ....நீ அவியிங்களுக்குப் பாதகமா எழுதினியா...?

என்ன பாதகமா....எழுதினியா?

யோவ் நான் சரியாத்தானச் சொல்லுறேன்....? நீ அவியிங்களுக்குப் பாதகமா எழுதினியா...?

என்ன பாதகமா....எழுதினியா?

என்ன..ய்..யா.... நா சரியாத்தான சொல்றேன்.... நீ அவியிங்களுக்குப் பாதகமா எழுதினியா...? ....... பாதகமா எழுதினியா...?   எழுதினியா...?  

(மயங்கிவிட்டார் நாட்டாமை)


                                                         .................................பரிதி.முத்துராசன் 
****************************************************************************
                                            thanks-YouTube-mohamed nifras
*******************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1