google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமா சாக்ரடீஸ்ம் சினிமா தத்துவங்களும்

Friday, February 01, 2013

சினிமா சாக்ரடீஸ்ம் சினிமா தத்துவங்களும்




என்ன நண்பர்களே! சினிமா சாக்ரடீஸ் என்றதும் எதோ சினிமா தத்துவங்கள் சொல்லப்போகிறேன் என்று நினைத்து வந்துவிட்டீர்களா? நான் எழுதுவது எல்லாமே தத்துவங்கள்தானே! சரி...சரி...திட்டாதீங்க...எதையாவது தத்து பித்து என்றுதான் எழுதுகிறேன் ........கோபம் வந்தால் சீழ் தலை சாத்தனார் மாதிரி நீங்களே உங்கள் தலையில் கொட்டிக்கொள்ளாதீர்கள்... உங்கள் கணணி தலையில் (இனிமே இந்தப் பதிவர் பக்கம் சேர்ந்தால் ...உன்னை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவேன்...என்று) தட்டுங்கள்   

தத்துவம்-1

பாம்பு படம் எடுத்தால்
அது நல்ல பாம்பு
கமல் படம் எடுத்தால்
அது விஷப்பாம்பா..?

தத்துவம்-2

விஜய் வைத்திருந்தால்
தீபாவளி துப்பாக்கியாம்-அது 
கமல் வைத்திருந்தால்
AK-47 துப்பாக்கியாம்    

தத்துவம்-3

களத்தூர் கண்ணம்மாவை மட்டும்
அம்மாவும் நீயே-னு பாடிப்புட்டு
தமிழ்நாட்டு அம்மாவை மட்டும்
சும்மாவும் நீயே!-னு பாடலாமா...?
இரண்டு அடி கொடுத்ததும்
இப்ப அம்மா...அம்மம்மா...வா?

தத்துவம்-4

அந்த உலக (கையாளும்)நாயகனின்
விஸ்வரூபத்தைப் பார்த்து விட்டு
எல்லோரும் கும்பிட்டார்கள்
இந்த உலகநாயகனின்
விஸ்வரூபத்தைப் பார்க்காமலேயே  
எல்லோரும் பயப்படுகிறார்கள்  

தத்துவம்-5

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது-கடவுள் தத்துவம்

விஸ்வரூபத்துக்கு 
தடை வந்ததோ...
தடை மேல் தடையாக வந்தது-கமலின் தத்துவம்   


அன்பர்களே! அன்று உன்னையே அறிவாய்! என்ற பைத்தியக்காரனுக்கு இன்னொரு பெயர் சாக்ரடீஸ்...இன்று சினிமாவை மறவாய்! என்று சொல்லும் இந்தச் சினிமா சாக்ரடீஸ் பிதற்றலை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்....இது சும்மா...சிரிக்க மட்டுமே!  

...............................பரிதி.முத்துராசன் 
   
*****************************************************************************

InfozGuide

சில சினிமா தத்துவ கீச்சுக்கள்................
விஸ்வரூபத்த "படம்" எடுத்து ஆடும் விஷமரூபமா மாதிபுட்டாய்ங்களே !!!

கடல்னு சொல்லி குட்டைய காமிச்சு ஏமாத்திப்புட்டானுங்க ஜட்ஜய்யா...

லாப நஷ்ட கணக்கே எல்லாவற்றுக்கும் பார்க்கும் நடிகர்களை காந்திக்கும் சாக்ரட்டீசுக்கும் ஒப்பிடாதீர்கள் பிளீஸ்


திரைப்படங்கள் தயாரிக்கும் போது மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்-ஆளுநர் ரோசையா :டாஸ்மாக் சரக்கு தயாரிப்பவர்களையும் எச்சரிங்க ராசா
ஆளாளுக்கு விஸ்வரூபதுக்கு ட்வீட்லாங்கரும் ப்ளாக்கும் எழுதாதீங்கப்பா ட்வீட்டரே கன்பீஸாகி ஓவர் கெப்பாகுட்டின்னு சொல்லுது.

தென்னாடுடை சிவன், என்னாட்டுக்கும் இறைவனை சீண்டி பார்த்த பாவம் # இப்ப விஸ்வரூபமாக தாக்குதோ # எல்லாம் எழுமலைக்கே வெளிச்சம்

‎'பரதேசி' என்ற டைட்டில் என் மாமனாரை புண்படுத்துவது போல் உள்ளது.... எனவே உடனே அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
*************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.................?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1