google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திரையரங்குகள் அரசுடமை ஆகுமா...?

Sunday, February 03, 2013

திரையரங்குகள் அரசுடமை ஆகுமா...?


சினிமா-
சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய அங்கம் 
சில நேரங்களில் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களில் சிலர் சமுதாய நலனுக்கு நல்லது செய்வதும் உண்டு அது பொருள் உதவிகளாகவும் இருக்கும் இல்லையேல் தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கும்

ஆனால் 
பல நேரங்களில் சினிமாவும் சினிமா துறையைச் சேர்ந்தவர்களால்  சமுதாயத்துக்குக் கெடுதல்கள்தான் அதிகம் செய்துள்ளனர் அதிலும் அங்கே மதிப்பிழந்து போகும் சினிமா பிரபலங்கள் அரசியலிலும் மூக்கை நீட்டினார்கள் காலப்போக்கில் அரசியல் சினிமாக்காரர்களிடம் அடகுபோனது

தேர்தல் நேரங்களில்  சினிமா அரசியலை அதட்டுவதும்  தேர்தலில் வென்ற பிறகு அரசியல் சினிமாவில் (வேண்டாதவர்களை) அதட்டுவதும்
இதுவே நல்ல காமெடி திரைப்படம் போல்தான் இருக்கும் 
அதற்கு விஸ்வரூபம் பிரச்சனையே நல்ல உதாரணம்

சரி நாம் விசயத்துக்கு வருவோம் ....
சினிமா- பணம் விளையாடும்  தொழில் 
நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கங்களையும் அரசுடமை ஆக்கிவிட்டால் சினிமாதுறையே அரசு காலடியில் வந்து விழும்

கணக்குப் போட்டு பார்த்தால் டாஸ்மாக் வருமானத்தை விட பல மடங்கு வருமானம் அரசுக்கு கிடைக்கும் அதையும் மூடிவிட்டு மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாம் 

இன்னும் நிறைய விலையில்லாதவைகளை
வாக்காளர்களுக்கு சாரி...மக்களுக்கு வாரி வழங்கி ...நிரந்தர முதல்வராக அம்மாவே இருக்கலாம்

இப்போதெல்லாம் அரசியல் எதிரிகள் சினிமாதுறையிலிருந்துதான் வருகிறார்கள் திரையரங்குகள் அரசுடமையாக்கப்பட்டால்.................
அம்மாவுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்...
கவர்னர்  அய்யா சொன்னது போல் சமுதாய உணர்வுடன் படம் தயாரிப்பார்கள் ..

.விவசாய பயிர்களுக்கு அரசே விலை நிர்ணயிப்பது போல திரைப்படங்களுக்கும் விலையை அரசே நிர்ணயித்தால் சினிமாத்துறையினரின் -நடிகர்களின் ஆட்டம் பாட்டம் அடங்கிப் போகும் வசூலை வைத்தே படம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம் படம் ஓடவில்லை என்றால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை அதனால் மொக்கை படங்கள் எடுத்து மக்களுக்கு தலைவலி தர மாட்டார்கள் 

இது எப்படி இருக்கு?
பேருந்துகள்,மதுக்கடைகள் இவைகள் அரசுடமை ஆனது போல் திரையரங்குகள் அரசுடமையானால் ....கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்

                                                                  .......................பரிதி.முத்துராசன்   
                              

*******************************************************************************
இன்றைய தத்துவம்.............................


மக்கள் நீங்கள் சொன்னதை மறந்துவிடலாம் 
மக்கள் நீங்கள் செய்ததை மறந்துவிடலாம் 
மக்கள் நீங்கள் ஊட்டிய உணர்வை 
ஒருபோதும் மறக்கமாட்டார்கள்
                ..................மாயா ஏஞ்சலோ
*******************************************************************************
சில அரசியல் கீச்சுக்கள்-



நான் கவிதை எழுதறதும் கலைஞர் கடிதம் எழுதறதும் ஒண்ணுதான் # யாருக்கும் புரியாது


பேரறிஞர் அண்ணாவிற்க்கு பூணூல் பூண்டும் விழா நடத்தினாலும் ஆச்சர்யமில்லை...!#கோவில்களில் சிறப்பு வழிபாடு!


இந்த நாட்டை சினிமாகாரர்களிடமிருந்து காப்பாற்ற ஒரு தீவிரவாதியை வெகுநாளாய் எதிர்பார்க்கின்றேன்...”#மீள்


கட்சி கோடி கட்டுன காரா இருந்தா காற்றா போகணுமாடா,மெதுவா போனா குடியா முளுகிபோய்யிடும் ..‘ரேஸ்'கல்ஸ்



வரும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் இந்திய வளர்ச்சியின் குறியீடாக நமீதாவை பயன்படுத்தலாம்!

(அரசியல் கீச்சுக்கள் ரொம்ப குறைவு காதல் கீச்சுக்கள் ரொம்ப அதிகம்)

******************************************************************************

இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து................?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1