google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம்-எப்படி வெற்றிப்படம்?கருத்துக்கணிப்பு

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம்-எப்படி வெற்றிப்படம்?கருத்துக்கணிப்பு

http://images.mathrubhumi.com/images/2013/Jan/31/03090_467467.jpg
 விஸ்வரூபம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு திரையரங்க உரிமையாளர்கள்,இஸ்லாமிய அமைப்புகள்,அரசு...இவர்களின் தடைகற்களை தகர்த்தெறிந்து திரைக்கு வந்துள்ளது

திரைக்கு வந்தபிறகும் சில  விமர்சனங்களால் தாலாட்டப்படுகிறது சில விமர்சனங்களால் தள்ளாட்டம் போடுகிறது
உதாரணத்துக்கு ஒரு வாரயிதழ் எழுதிய விமர்சனம் ...ஆரம்பத்தில் ஆகா ஓகோ என்று எழுதிவிட்டுக் கடைசியில்...

"இந்த  மக்கள் பணம் தருவார்களோ, இல்லையோ ,,,தெரியாது. மரியாதை தருவார்கள்.அது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது கமல்...கீப் இட் அப்"


ஆஹா..என்ன தீர்க்கமான பா...ர்..வை ! (இப்படியெல்லாம் படம் எடுத்தால் உலகநாயகரே உமது கையில் )திருவோடுதான் மிஞ்சும்..ஆனால் உமக்கு நல்ல மகா நடிகர் பட்டமும் மரியாதையும் கிடைக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ ...அவரோ நூறு கோடி செலவு செய்துவிட்டேன் என்று அழாதக்குறையாக... அவர்களோ விவாத மேடை போட்டு இன்னும் அவரை வருத்தெடுக்கிறார்கள்

உலகநாயகன் உலகத்தரத்தில் ஒரு ஜல்லிக்கட்டு மாடு வாங்கிவந்து தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் ஓடவிட்டது போல் உள்ளது

பாவம் அவருக்கு ஆதரவாக அறிவிக்கைவிட்ட தலைவருக்குத் வழக்குரூபத்தில் தலைவலி...? பம்மி பம்மி வெளியே வந்த சினிமா பூச்சாண்டிகள் இப்போதே அமிர்தாஞ்சனம் வாங்க தயாராகிவிட்டார்கள் 

http://www.prajavani.net/sites/default/files/article_images/2013/01/25/E404CBB3-C07.jpg  
ஆனால் இன்றோ உலகநாயகன் தனது படம் 120 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படம்மாகிவிட்டது அனைவருக்கும் நன்றி சொல்கிறார் அவர் வீடு தப்பித்துக்கொண்டது அதில் நமக்கும் சந்தோசமே ஒரு கலைஞன் காயப்படக்கூடாது...கண்ணீர் சிந்தக்கூடாது 

தமிழ் திரையுலகிலிருந்து இந்திய திரையுலகில் நூறு கோடி வசூல் மன்னர்கள் வரிசையில் எந்திரன்-ரஜினிகாந்த்தும் துப்பாக்கி- விஜயும் இப்போது மெதுவாக அதே நேரம் விரைவாக விஸ்வரூபம்-கமலஹாசனும் இணைந்து கொண்டார் வாழ்த்துக்கள் 

ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாகத் தீர்மானிக்க  நிறையக் காரணங்கள் இருக்கின்றன இப்போதைய பார்வையாளர்கள் அதீத அறிவுஜீவிகள் அதற்கு இணையமும் கல்வியறிவும் காரணம் ஒருவருக்குப் பிடிக்கும் காரணம் இன்னொருவருக்கு அபத்தமாக இருக்கும் 

இப்போதைய திரைப்படப் பார்வையாளர்கள்தாங்கள் பார்க்கும் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்யும் வல்லவர்கள்

ஆனால்..........உண்மையில் விஸ்வரூபம் ஒரு சிறந்த வெற்றிப்படமா?
நாம் இதுவரை நடத்திய விஸ்வரூபம் படத்துக்கு நடத்திய கருத்துக்கணிப்பில்..........




















விஸ்வரூபம்  வெற்றிபடமே...! 

என்று கருதுகிறோம் இங்கே அதன் வெற்றியைத் தீர்மானித்த காரணிகள் எது என்பதை அறிந்துகொள்ளவே இந்த கருத்துக்கணிப்பு........ 
 
நீங்கள் விஸ்வரூபம் திரைப்படம் பார்த்தவராக இருந்தால்...இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டுகிறேன் 

விஸ்வரூபம் வெற்றிப்படமாக காரணங்கள் ...?

ஒருவர் எத்தனை காரணங்களுக்கு வேண்டுமெனிலும் வாக்களிக்கலாம் ஆனால்...ஒருவர் ஒருமுறைதான் வாக்களிக்க முடியும் 
தாங்கள் வாக்களித்தமைக்கு நன்றி...!
*****************************************************************************
விரைவில்......
உங்கள் கணணி திரையில் எனது அதிரடி திரைப்பதிவு வெளியீடு...  
https://si0.twimg.com/profile_images/3397179364/a97d823aa99fc5c5b862ef1ef3444359.jpeg
'தல' அஜித்-சினிமாவா?வாங்க அசைபோடலாம்...?
***************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1