google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம் தடைக்கு காரணம் யார்?

Tuesday, February 05, 2013

விஸ்வரூபம் தடைக்கு காரணம் யார்?


தமிழகத்தில்உலக நாயகனின் விஸ்வரூபம் பல தடைகளைத் தாண்டி இப்போது திரையரங்குகளில் 7-ஆம் தேதி வெளிவரும் நிலைக்கு வந்துவிட்டது 

விஸ்வரூபம்- வரும்...ஆனால் வராது..!...? என்று நாம் எழுதியது போன்றே இப்போது திரைக்கு வரும்....ஆனால் முழுசா வர்....ர்...ராது (வெட்டு குத்துக்களுடன்தான் வருகிறது) எப்படியோ வந்தால் சரி 

ஆனால்............   
தமிழ் நாட்டில் மட்டும் விஸ்வரூபம் வெளிவர  தடைக்கு முழுக் காரணகர்த்தா யார்? என்பது மட்டும் மர்மமாக உள்ளது

விஸ்வரூபம் தடை செய்யப்பட நிறைய மாமனிதர்கள் ஏன் கடவுள் கூட காரணமாக இருந்தார்!   இஸ்லாமிய அமைப்புகள் படத்தைப் பார்த்துவிட்டு  தங்கள் மதம்  இழிவு செய்வதாகப் புகார் அளித்ததாலா?

 உளவுத்துறை கலவரம் வரலாம் என்று அறிவிக்கை கொடுத்ததாலும் கலவரத்தை அடக்கப் போதிய காவலர்கள் இல்லை என்றும் உண்மையில்  அரசு இந்தத் தடை நடவடிக்கை எடுத்ததா?

இத்தகைய சர்ச்சைக்குரிய படம் எடுத்த கமலஹாசன் இஸ்லாமியர்கள் உணர்வுகளுக்குக்கு முதலில் பதில் அளிக்காமல் கலாச்சார பயங்கரவாதம் என்றும் தடை நீக்க நீதித்துறையை நாடியதும் சிக்கலை அதிகப்படுத்தியதா?

 அரசியல்-சினிமா இரண்டும் நீயா? நானா? என்ற போட்டி போட்டுக்கொண்டு  விஸ்வரூபம் தடைக்கு காரணமா?

திரையரங்கம்-D.T.H-ஒலிபரப்பு உரிமை போன்ற வர்த்தகம் செய்த  குளறுபடிகளும் வஞ்சகமும் காரணமா?

சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் நல்ல படங்கள் எடுக்காமல் கேடுகெட்ட படங்களை எடுத்து பணம் சம்பாதிக்கும்  மற்றும் விளம்பரத்திற்காக எதுவும் செய்ய நினைக்கும் சில அறிவு ஜீவிகள் என்று சொல்லும் சில அறிவற்ற திரையுலகினர்களா? 


நமது கருத்துக்கணிப்பு முடிவு......................
******************************************************************************






















விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது நியாயமா....?



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இப்படி நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம் . எப்படியோ படம் திரையரங்குகளுக்கு  வரும்  நிலை வந்துவிட்டதுஆனாலும் மனம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டுள்ளது அதற்கு விடைதான் கிடைக்கவில்லை உங்களுக்குத் தெரியுமா....? 

 மருத்துவர்களில் யார் போலி? யார் நிஜம்? என்று தெரிந்தால்தானே  
நோயாளிக்கு நல்லது.சினிமாத்துறை சுதாரித்துக் கொள்ளுமல்லவே?
இனிவரும் சினிமாக்களாவது  இந்தக் கொடிய வைரஸ் அல்லது டெங்கு கொசுக்கடியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளுமல்லவா?
ஆனால்  விஸ்வரூபம் தடைக்கு உண்மையான காரணம் யார்?அதுமட்டும் மர்மமாக உள்ளது?   
எனக்குத்தான் தெரியவில்லை..! உங்களுக்காவது தெரியுமா?

விஸ்வரூபம் தடைக்கு காரணம் யார்?


முடிவு தேதி-06/02/2013 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 
இப்போதுவிஸ்வரூபம் படம் விவகாரத்தால் மத்திய அரசு கமிசனும் புது சட்டமும் இயற்ற முடிவு செய்துள்ளது நாம் அறிந்ததே ..அதற்கு இது உதவியாக இருக்கும் .


                                                       .............................பரிதி.முத்துராசன் 

***************************************************************************
விஸ்வரூபம் அனைத்து "தல"  ரசிகர்களையும் பாதித்துள்ளதோ?
இது விஸ்வரூபம் அல்ல ....'தல' ரூபம்....?காணொளி

                                            thanks-YouTube-KARUNA KARAN

********************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....? 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1