google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அம்மாவும் ஈழ விடுதலையும்

Thursday, March 07, 2013

அம்மாவும் ஈழ விடுதலையும்


ஏன்டா...அறிவுச்செல்வா!
இப்படி ஆந்தைமாதிரி முழிக்கிறாய்
என் முகம் ஏன் வாடியிருக்கிறது...?என்றுதானே
பேந்த பேந்த விழிக்கிறாய்...?

ஒரு முக நூல் பக்கம் போயிருந்தேன்
ஈழப் பெண்கள் முக நூல் பக்கம் அது.

 ஈழம்பெண்கள்
தமிழ் மக்களே தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்குவந்தால் தமிழகத்தில் தமிழின் மீட்சி நல்ஆட்சி ஈழவிடுதலை ஆகியவை சாத்தியம் ஆகும் உங்கள் வாக்கை கருத்தாக தெரிவிக்கவும் 
என்று  கேட்டிருந்தார்கள்.....

நாமதான் கருத்துக்கணிப்பு புலி ஆச்சே என்று 
நமது  வலைப்பூவில் வைத்தேனடா....ஒரு கருத்துக்கணிப்பு......... 

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு  வந்தால் ஈழவிடுதலை சாத்தியமாகும் ? என்று...
(இன்று காலை 10 மணிவரை வந்த) முடிவை...நீயே பாரடா..............


நாம் தமிழர் -1
  53 (22%)
மதிமுக-2
  73 (30%)
தேமுதிக-3
  7 (2%)
திமுதிக-4
  9 (3%)
அதிமுக-5
  15 (6%)
யாருமில்லை
  82 (34%)

யாருமில்லை என்று வாகளைத்துக் கொண்டிருக்கிறார்கள் 


(அண்ணேன்.எனக்கு   ஒரு டவுட்டு....?
யாருமில்லைன்னு எல்லோரும் வாக்களிச்சா...
அப்புறம் எதுக்கு.அண்ணேன் இந்தக் கட்சிகள் இருக்கு..?





























ஆனால்...

அம்மா நினைத்தால் ஆகாதது உண்டா...
நேற்று கூட அரசமரத்தடி  அதிரடி ஜோசியரு 
கனவுல வந்தாரு....காதுல சொன்னாரு.....

"அம்மாவுக்கு...சிம்ம ராசி மகம் நட்சத்திரம் 
ஏழரைச் சனி எப்பவோ முடிஞ்சிப்போச்சி ...
ஆயுளுக்கும் அம்மாவுக்கு அதிஷ்டம் கொட்டும் ...
தொட்டதெல்லாம் துவங்கும்...எலாம் ஜெயம்..ஜெயம்"..னு 


அதுவும் சரிதாண்டா... அறிவுச்செல்வா!
அருமையாகச் சொன்னாய்....

மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும் 
இல்லையேல் இடித்துரைக்க வேண்டும் 
பாலச்சந்திரன் படுகொலை பார்த்து 
அம்மாவின் ஆவேசம்....
அதுவும் கேட்குது ஐநா சபை வரை...


இல்லம்தோரும் இலவச அரிசி கொடுத்து 
இன்னல் தீர்த்த தாயே!....அம்மா!
பசித்த வயிறு புசிக்கட்டும் என்று 
பட்டுன்னு இட்லி ஒரு ரூபாய்க்கு  போட்டு 
உலக சாதனை செய்த உன்னதத்தாயே!



இன்னல்படும் இலங்கைத் தமிழர்களின் 
இடர்நீக்க படைதிரட்டுங்கள்.....
உலகம் உங்களை உற்றுப் பார்க்கும் 
உலக நாயகியாக உலா வாருங்கள்...
உங்கள் காலடியில் நோபல் பரிசு விழும்    



இவர்கள் ஒன்பதுபேரும் நோபல்(NOBLE) பெண்கள்...

Bertha von SuttnerJane AddamsEmily Greene BalchBetty Williams and  Mairead Corrigan

Mother TeresaAlva MyrdalAung San Suu KyiRigoberta Menchu

இவர்கள் முரண்பாடுகள் எதிராக போராடிய உலக சமாதான நாயகிகள் 
இவர்கள் மனிதாபிமானத்தை நேசித்தவர்கள்.மனித உரிமையை நிலைநாட்டியவர்கள்.
1-சீமாட்டி பெர்த்தா வான் சட்நேர்(Baroness Bertha von Suttner)
2- ஜேன் ஆடம்ஸ்(Jane Addams)
3-எமிலி கிரீன் பால்க் (Emily Green Balch)
4-பெட்டி வில்லியம்ஸ்(Betty Williams)
5-மைரிட் கோரிஜான்(Mairead Corrigan) 
6-அன்னை தெரசா(Mother Teresa)
7-ஆல்வா மிர்தால்(Alva Myrdal)
8-ஆங் சான் சூ கீ(Aung San Suu Kyi)
9-ரிகோபெர்டா மென்ச்சு தும்(Rigoberta Menchú Tum)     
நோபல் பெண்கள் நிறைய பேர் இருந்தாலும் இவர்களே மனிதாபிமானத்தையும் மனிதவுரிமைக்காவும் போராடியவர்கள் 
இவர்களின் வெளிச்சம் உலகமே அறியும் அவர்களுக்கு விளக்கம் சொல்ல நினைப்பது என் அறியாமையைக் காட்டும்.அதிலும் வீரப் பெண்மணி ஆங் சான் சூ கீ செய்தது அளவிடமுடியாதது. 


  




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1