அன்பை
முகத்தில் வைத்துக்கொள்!
பண்பை
அகத்தில் வைத்துக்கொள்!
அறிவை
தலையில் வைத்துக்கொள்!
அழகை
கண்களில் வைத்துக்கொள்!
காதலை
இதயத்தில் வைத்துக்கொள்!
கனவை
தூக்கத்தில் வைத்துக்கொள்!
துணிவை
துக்கத்தில் வைத்துக்கொள்!
அடக்கத்தை
உடலில் வைத்துக்கொள்!
அழுகையை
கைகளில் வைத்துக்கொள்!
அப்படியே
அதைக் கை கழுவிவிடு....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |