google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அங்கே ஒரு பிரபலத்தின் பரிதாபம்.

Friday, March 22, 2013

அங்கே ஒரு பிரபலத்தின் பரிதாபம்.


1993-ல் மும்பையை உலுக்கிய கொடூர தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சட்டவிரோத ஆயுத கடத்தல் குற்றத்திற்காக நடிகர் சஞ்சய் தத்- ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதும் பாலிவுட் படவுலகம் அதிர்ச்சிக்குள்ளானது.....

சினிமா உலகப் பிரபலங்கள் பலர் அவரது இல்லங்களில் திரண்டு அவருக்கு ஆறுதலும் அனுதாபத்தையும் சொல்ல முடியாமல் விக்கி தவித்தனர்...

இன்னும் சிலர் கரண் ஜோஹர், ரித்திக் ரோஷன், பிரிதிஷ் நந்தி, அர்ஜூன் ராம்பால் போன்றவர்கள் தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் அவர்களது ட்வீட்டரில் நாலு கீச்சு கீச்சிவிட்டு தூங்கப்போனார்கள்...செய்தி கேள்விப்பட்டதும் படைதிரண்டு பாலிவுட் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள்   தத் வீட்டில் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர்....


இன்னும் சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபா சித்திக் சஞ்சய் சகோதரி காங்கிரஸ் எம்.பி. ப்ரியா தத் கூடக் கலக்கமடைந்த நிலையிலேயே அவரது இல்லத்தில் காணப்பட்டனர்....


இதில் நிறையப் பேர்களின் முகம் உண்மையிலேயே வாடிப்போயிருந்தது..ஏன்? என்றால் அவரை நம்பி பணம் போட்டுப் படம் எடுத்துப் பாதியில் நின்று எங்கே தாங்கள் பரதேசியாகிவிடுவோமோ(மும்பை திரையுலகில் ரூ.200 கோடி முடங்கும் அபாயம் )என்ற உள்ளுரப் பயமே..... 


வெளியே இருந்து திரைப்படங்கள் மூலம் சஞ்சய் தத் ஆண்டுக்குச் சம்பாதித்தது ரூ.20 கோடிக்கு மேல்...இனி அவர் சிறையில் உள்ளிருந்து சம்பாதிக்கப்போவதோ ஆண்டுக்கு ரூ.10,000/-ம் தாண்டாது...


இதனால் அறிவிக்கிப்படுவது என்னவென்றால் இங்கே உள்ள பிரபல அய்யாமார்களே!...உஷார்...உஷார்...நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் உங்கள் பணமோ?...அரசியல் பலமோ?...நண்பர்கள் ஆதரவோ? உங்களைக் காக்க காக்க என்று வராது...என்றும் வராது....டும் ...டும்  .***************************************************************
சொன்னங்க சொன்னாங்க...........
இன்றைய இந்தியாவின் 1% மாமனிதர் அறிவுக்கடவுள் மார்க்கண்டேய கட்ஜுஅவர்களின் கருத்து............
1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் நேரடியாக பங்குகொள்ள வில்லை என்பதால் அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்  

கோலிவுட் சினிமாக்கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.....
சஞ்சய்  தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது.இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் அது சரி..பதிவு உலக மாமேதைகளே! உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை....?


 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 
Images courtesy of-google.co.in
***************************************************************************
இன்றைய சென்னையின் புது விளையாட்டு 
அரசியல் கட்சிகளின் சுவரொட்டி விளையாட்டு......
காணத்தவறாதீர்கள்.................. 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1