google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பெண்களின் அவலங்கள் எழுதாதக் கதைகளாய்...

Friday, March 22, 2013

பெண்களின் அவலங்கள் எழுதாதக் கதைகளாய்...


வீட்டுக்கு வெளியே நடக்கும் பாலியல் வன்கொடுமை தாக்குதல்கள்தான் வெளிச்சத்துக்கு வருகின்றன..வந்தாலும் அச்சச்சோ என்று சிலவும் ஆர்பாட்டங்களில் சிலவும் அப்படியே அமுங்கிப் போகின்றன....உண்மையில் எந்த நாடுகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை


பெண்கள் கதைகளில் மாயக்காரிகள் சூனியக்காரிகள் போன்றே சித்திரிக்கப்படுகிறார்கள் கதைகளில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுவே அவர்கள் நிலை இன்னொரு கோணத்தில் அவர்கள் ஆண்களின் போதைப்பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள் அவன் படைக்கப்பட்டது ஆண்டவனுக்கு என்றும் அவள் படைக்கப்பட்டது அவனுக்கு என்றும் (He for HIM,She for him) என்று எழுதிவைத்துப் போனான் ஆங்கிலக் கவிஞன் மில்டன் இலக்கியத்தில் மட்டுமல்ல மனிதவழக்கத்திலும் உலகில் பெண்கள் நிலை இதுவே.

இன்னும் சொல்லப்போனால் நிறைய நிகழ்வுகளில் பெண்களே பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைக்குக் காரணமாக ..அல்லது மூலமாக...இருக்கிறார்கள் தாயின் கள்ளக் காதல் மகளின் வாழ்வை கெடுக்கும் நிகழ்வுகள் நிறைய...அதில் ஒன்றுதான் சமிபத்தில் ஆங்கில வலைதளத்தில் வாசித்த உண்மைக்கதை...தன் தாயின் முன்னாள் காதலனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆழான ஒரு பெண் வெளிஉலகுக்குத் தெரியாத தன்கதையைப் பயத்துடனும் அழுகையுடனும் வெளிப்படுத்திருந்தார்..அந்த நிஜத்தின் பிரதிபலிப்பே இப்பதிவுக்குத் தாக்கம்...        












































கண்ணீர் வடியும் முகத்தோடு.....
"என்ன ஒரு அவமானம்?"
சிந்திப்பதுபோல் தொங்கிய தலை... 
அவனால் உண்டான காயம் 
என் கண்ணீர்தான் இங்கே சேதாரம்.....

என் அனுமதியின்றி  
என் கன்னித்தன்மையை 
அவன் திருடிவிட்டான்...
என் கண்கள்தான் சாட்சி!

அவன் பலவந்தமாக...
நான் பரிதாபமாக...
பலியானது என் பெண்மை 
என் மனசாட்சியே சாட்சி!   

அவனுள் நான் இல்லை
அதை அறிந்தும் 
என்னுள் இறங்கிய அவன் 
எழுந்து செல்லவில்லை...
என்னாலும் அவனை 
எட்டி உதைக்க முடியவில்லை...
ஆடைகள் அகற்றப்பட்டதால் 
அவமானத்தில் அடங்கிவிட்டேனா....?
ஆண்மையின் பலத்தில்தான் 
அடங்கித்தான் ஒடுங்கிவிட்டேனா...?

இது நேற்று நடந்தது....
இந்த நினைவு 
இன்னும் தொடர்கிறது....
"நான் ஏன் இறக்க கூடாது?"என்று 
என்றும் தொடருமா....?

நான் இறந்தாலும் இருந்தாலும் 
இறந்துகொண்டே இருந்தாலும் 
அதில் அவனுக்குக் கவலையில்லை
ஆடையாக என்னை
அணிந்து கொண்டான் அவன் 
அதில் அவனுக்குச் சந்தோசம் 
அழுக்கானதும் நானே!
கிழிந்து போனதும் நானே! 

இதுபோல் சமுதாயத்தில் நிறையப் பெண்களின் அவலங்கள் எழுதாதக் கதைகளாய்  இருக்கின்றன.எத்தனையோ அறிஞர்கள் காலங்காலமாக எடுத்துரைத்த போதிலும் எவரும் அறிவதில்லை...........

"ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதில் உள்ள பெண்களின் சமூக நிலையை வைத்தே அளவிட முடியும்"...என்று சொன்னார் அறிஞர் கார்ல் மார்க்ஸ்.இன்றைய இந்தியாவில் வெளியே தெரியும் தெரியாத பாலியல் வன்கொடுமைகள்  அவரது கணக்கியல் படி பார்த்தால் நமது சமுக முன்னேற்றம் பின்தங்கிய நிலையிலேயே 

அரசியலில் ஆட்சிசெயபவர்கள் பெண்களுக்குத் தங்கள் கட்சியிலும் ஆட்சியிலும் அதிக இட ஒதிக்கீடு செய்வது அவர்களது  சொந்தங்களை முன்னிலைப்படுத்தவே சில மதங்களில் பெண்களை கடவுளாகவும் தேவதைகளாகவும் ...அதே நேரத்தில் அரக்கிகளாகவும் துர்தேவதைகளாகவும் காட்சிப் படுத்துகிறார்கள்

என்றும்  மொத்த பெண்கள் முன்னேற்றத்துக்கும் முயலாத அரசுகள் நிலையானது அல்ல..என்றும் பெண்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1