அன்று தேவர்களும் அசூரர்களும் பாற்கடலை கடைந்தது போல்...
இன்று ஈழத்தமிழர்களுக்கு விமோசனம் தர
ஐ.நாவில் அமெரிக்கத் தீர்மானம்..
உலக நாடுகள் சேர்ந்து ஏதோ வலி நிவாரணி
வழங்கப்போகிறார்கள் என்று நினைத்தால்....
கடைசியில் திரண்டு வந்தது
விஷம் மட்டுமே...அமுதத்தை காணவில்லை
அட..ஆண்டவா!
அமுதென்றுச் சொல்லி...
ஈழத்தமிழர்களுக்கு
மீண்டும் விஷம் கொடுக்கிறார்களே...?
இருபத்தி அயிந்து நாடுகள்
என்ன போட்டார்களோ...?
பதிமூன்று நாடுகள் விஷம் கலந்தார்கள்.
எட்டு நாடுகள் எங்கே போனார்களோ....?
கடைசியில்....
அவர்கள் கிண்டியது...
அல்வா...அல்வா...அல்வா...
ஈழத்தமிழர்களுக்கும்
இந்தியத்தமிழர்களுக்கும்
அவர்கள் கொடுத்தது...
அல்வா...அல்வா...அல்வா
உப்புச் சப்பு இல்லாத
உண்டால்
இருக்கும் கொஞ்சம் உயிரும்
இல்லாமல் போய்விடும்
ஐ.நா.அல்வா...அல்வா...அல்வா...
இதற்காகவா....
இங்கே இத்தனை ஆர்ப்பாட்டம்...?
இரவு பகல் உண்ணாவிரதம்....?
தீ குளிப்பு உயிரிழப்பு.....?
அது சரி...இந்த அல்வா எங்கே கிடைக்கும்...?
என்று கேட்போரே! கொஞ்சம் பொறுங்கள்
நம்ம அரசியல் அய்யாமார்களே கூவிக் கூவி விற்பார்கள்
அவர்கள்தான் அல்வா கிண்டியதாக அலட்டுவார்கள்
ஆஹா..ஓகோ...என்ன சுவை என்று
அவர்களே பாராட்டிக்கொள்வார்கள்....
********************************************************************
அமெரிக்கத்தீர்மானம், ஐ.நா.
மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக, அதனைப்
பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா, இந்தியா
ஆட்டுக்குச் சொந்தக்காரனே
அக்கறைஇல்லாமல்இருக்கிறபோது, கசாப்புக்கடைக்காரனிடம் கருணையைஎதிர்பார்ப்பது
போலத்தான்இதுவும்.#அமெரிக்கத் தீர்மானம்
மொத்தத்துல அமெரிக்கத்
தீர்மானம் தன்னோட டெசோ மாதிரி ஆகிடுச்சேன்னு தலைவர் வெளிப்படையா சொல்லாம
புலம்புறார், நியாயம்தானே!! இருக்காதா பின்ன!
அமெரிக்கத் தீர்மானம்
இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகளை பாதிக்கும் - இந்தியா!#மிச்சம் இருக்குற
மக்களையும் கொல்றதுக்கு பேரு மறுசீரமைப்பாடா?
***************************************************************************
இன்றைய தமிழ்நாட்டு அரசியல்...............
யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க....நான் பிரதமரானால் தனிஈழம் வாங்கி கொடுக்க முடிவு பண்ணியிருக்கிறேன்...............
*****************************************************************************
நேற்று ...............
இன்று..........................
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |