google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அனுஷ்கா-சினிமா?வாங்க அசைபோடலாம்...?

Monday, March 11, 2013

அனுஷ்கா-சினிமா?வாங்க அசைபோடலாம்...?


"நடிகர்களை மட்டுமே அசைபோடுகிறாயே..எ(அ)ருமை மாடே! எங்களைப் பற்றி ஏன் அசைபோடுவதில்லை...? நாங்கள் இல்லாமல் சினிமாவா...? "என்று நேற்றிரவு என் கனவில் வந்து கூட்டம் கூடமாகச்  சினிமா நடிகைகள் செல்லமாகக் கேட்டுக்கொண்டதால்.....

அதுவும் சரிதான்...இப்ப நாட்டுல நடக்கிற நிகழ்ச்சிகளைப் பார்த்தா..நைட்ல கெட்ட கெட்ட கனவா வருதப்பா....இப்படிஏதாவது சினிமாக்காரங்களை ஆசையாய் அசைப்போட்டா...எந்த அஜீர்ண தொல்லையும் இருக்காதுன்னுதான்.... இவங்கள இப்ப நினைச்சாலே கண்ணக்கட்டுதே....அய்யயோ..படிச்சா....  கனவுல தேவதைகளா வருவாங்கலோ...?...அவ்வவ..படியுங்க 

அனுஷ்கா-














































அம்மணியின் உண்மையான பெயர் ஸ்வீட்டி ஷெட்டியா?அல்லது அனுஷ்கா ஷெட்டியா...?ஏதோ ஒரு ஷெட்டி ..(நடிகைகள் பற்றி எழுதனுமுனா தெலுங்கு,மலையாளம்,இந்தி,பெங்காளி,கன்னடம்...இப்படி எல்லா மொழியும் தெரிஞ்சிருக்கனுமோ...?) ....

2005-ல் நாகர்ஜுனாவுடன் தெலுங்கில் SUPER என்ற படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அறிமுகமான அம்மணி ரவிதேஜாவுடன் விக்ரமார்க்குடு தெலுங்கு படத்தில் கதாநாயாகியாக பளிச்சிட்டார்...ஆனால் கோடி ராமகிருஷ்ணா எழுதி இயக்கிய 2009 தெலுங்கு-அருந்ததியில் அக்னி போன்று ஆவேசமாக  நடித்தமைக்காக Special Jury Award வென்றார்..இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
2010 தெலுங்கு வேதம்(vedam) படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்துச் சிறந்த நடிகை விருது(2011 Filmfare Awards South and 2011 CineMAA Awards)பெற்றார்.

தமிழில் இவர் சுந்தர்.சி-யின் ரெண்டு படத்தில் தோன்றினாலும்  2010 -ல் இவர் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமான தமிழ் சிங்கம் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்து...தென்னிந்தியாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார்...

இவர் டோலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்த்துடன் விளங்கினாலும் இன்றுவரை கோலிவுட்டில்தான் பேரும் புகழும் பெற்று பவனிவருகிறார்....இவர் பாலியல் தொழிலாளி சரோஜாவாக வானம் திரைப்படத்தில் இவரது நடிப்புப் பேசப்பட்டது.






















































]ஏ.எல்.விஜய்யின்  தெய்வத்திருமகள் திரைப்படத்தில் வக்கீல் அனுராதாவாக நடிகர் விக்ரமுடம்  அழகு மிளிரவும் நடிப்பு செரிவுடனும் சிறப்பாகத் தோன்றினார்.அதேபோல் தாண்டவம் படத்தில் விக்ரமுடன் இவரது காதல் காட்சிகள் அனைவராலும் பாராட்டுப் பெற்றது....

சமீபத்தில் தமிழில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் அதிரடி மசாலா படத்தில் இவரது நடிப்பை விட இவரது வசீகரம்,மாயக் கவர்ச்சி, மயக்கும் அழகு,வசியப்படுத்தும் மாயத்தோற்றம், ...அவ்வ..திரை விமர்சனம் செய்பவர்களை என்ன செய்ததோ படத்தை மொக்கை என்று சொல்லவைத்து அம்மணியை அட்ராசக்கை என்று பாராட்டச் செய்தது.

                               thanks-YouTube-pinkpurse1234

(தெலுங்கில் இவரது நடிப்பு மிர்ச்சி (MIRCHI) (நமது விமர்சனம்..?) PRABHAS-வுடன் Chemistry,Physics,Biology..என்று அனைத்து வகையிலும் சிறப்பாக இருப்பதால் அம்மணி மீண்டும் டோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்குவார்..)

இதனால் எல்லோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்....
 விரைவில் திரைக்கு வரவிருக்கும் சிங்கம்-I I சூர்யாவுடனும் இரண்டாம் உலகம் ஆரியாவுடனும்  வசீகரி அனுஷ்கா(எப்படி நம்ம பட்டமளிப்பு...?)வின் வசீகரக் கவர்ச்சி நடிப்பைக் காணத்தவறாதீர்கள்...டும் டும் டும்..ம்...   
 







இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1