google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டெசோவின் முழு அடைப்பு போராட்டம் வெற்றியா...?

Tuesday, March 12, 2013

டெசோவின் முழு அடைப்பு போராட்டம் வெற்றியா...?

டெசோவின் இன்றைய முழுஅடைப்புப் போராட்டம் கலைஞருக்கு வெற்றியா..? தோல்வியா...? ஆய்வு எதற்கு?...இனவெறிக்கு எதிராக எறியப்பட்ட கற்களில் இதுவும் ஓன்று... இனவெறிகூட்டத்துக்கும் ராசபக்சேவுக்கும்  எதிராக  நகர்த்தப்படும் சதுரங்க காய்களில் இதுவும் ஓன்று.... வெற்றியை நோக்கி சிலஅடி தூரமாவது  முன்னேறிச் செல்லும் இதுபோன்ற முயற்சிகள் யாரால் செய்யப்பட்டாலும் வரவேற்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் இந்த முழுஅடைப்பு வன்முறையற்று அமைதியான முறையில் நடந்ததே...நமது ஒற்றுமையைக் கொஞ்சமேனும் உலகுக்குச் சொல்லும் என்று நம்புவோமாக....




  





















டீ கடை பெஞ்சில் காலாட்டியபடி  அரசியலை அசைபோட்டுக் கொண்டு கொண்டிருக்கும் பழைய பஞ்சாங்க நிலை இன்று இல்லை..
இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் சுண்டுவிரல் அசைவுகூடக் கவனிக்கப்படுகிறது.அவர்கள் வாயிலிருந்து ஒரு சிறு வார்த்தை சிதறியோ தவறியோ விழுந்தால் கூட ...பல கோடி கண்டனக்குரல்கள் கேட்கின்றன உடனே பல லட்சம் கீச்சுக்குருவிகள் (twitter) கொத்தி குதறுகின்றன...பக்கம் பக்கமாக முகநூல்கள் பல்லவி பாடுகின்றன இணையப் பதிவர்கள் எழுச்சி கொண்டு வருகின்றார்கள்...

அடக்குமுறையால் கருத்துச் சுதந்திரம் சிறையில் அடைக்கப்பட்டாலும் கீச்சர்களோ...முகநூல் மனிதர்களோ பதிவர்களோ ஓடி ஒழியவில்லை...லயோலா மாணவர்கள் உண்ணாவிரதமும் அதற்குக் கொந்தளித்து எழுப்பப்பட்ட லட்சிய ட்வீட்களும் பல லட்சத்தைத் தாண்டும்..நிச்சயம் இலச்சியத்தை வெல்லும்  

தர்ம அடி என்று கேள்விப் பட்டு இருக்கிறார்களா...? அது ட்வீட்டரில்தான் காணமுடியும்....சும்மா போவோரும் வருவோரும் நாலு (கீச்சு)தட்டு தட்டிவிட்டுப் போனார்கள்...இது அவர்களுக்கு உள்ள இனப்பற்று என்பதைவிட மனிதாபிமானத்தை நேசிக்கும் மனித இனப்பற்று

இன்றைய முழுஅடைப்பு மொத்த 
வட இந்தியர்களையும் தமிழகத்தை உற்றுபார்க்க வைத்துள்ளது...அவர்கள் கல்லெறிய வேண்டாம் வெற்றிக்கனிக்கு கல்லெறியும் நம்மீது கல்லெறியாமல் நம்மைக் காயப்படுத்தாமல் இருந்தாலே போதும் வெற்றி நிச்சயம்...

இன்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சி,திரினாமுல் காங்கிரஸ்,பகுஜன் சமாஜ் கட்சி...இப்படி அனைவரும் மனிதவுரிமை மீறலைச் சுட்டிக்காட்டும் நிலை...இது வரக் காரணம் ஒருவைகையில் டெசோவின் முயற்சியே...

இனியேனும்  இனவெறியன் இங்கே வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு  இளித்துச் செல்லும் இழிநிலை வராதிருந்தாலே....
இனியேனும் இனவெறியன் இங்கே வந்து திருப்பதி லட்டு தின்றுவிட்டு தமிழன் முகத்தில் காறித்துப்பும் இழிநிலை வராதிருந்தாலே...
இந்தப்போராட்டம் முழுவேற்றியே...! 

சிறுவயதில் படித்த வேடிக்கை கதை.....
நாம் ஒருவர் பாலுக்குப் பதிலாகத் தண்ணீர் ஊற்றினால் யார் கண்டுபிடிக்க முடியும்..? என்று  அனைவரும் பாலுக்குப் பதிலாக அண்டாவில் தண்ணீர் நிரப்பியது போல் இல்லாமல்....இனவெறியனுக்குப் பால் ஊத்துங்கள்.

சே குவேரா புரட்சி பற்றி சொன்னது போல்...
வெற்றி- அது கனிந்து விழும் கனியல்ல நாம்தான் விழச்செயவேண்டும் எல்லோரும் கல்லெறியுங்கள் யார் எறிந்த கல்லால் விழுந்தது கனி என்று அப்புறம் ஆராய்வோம்





































ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC)-லில்  அமெரிக்காவால் நடத்தப்படும் இலங்கை எதிர்ப்புத் தீர்மானத்தை ஆதரவு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளரின் அமைப்பு (TESO) நடத்திய முழுஅடைப்புப் போராட்டம் என்றுதான் வெளிநாடுகளிலும் வட மாநில ஊடகங்களிலும் ஏனோதானோ என்று எழுதுகின்றன ...

டாஸ்மாக் குவார்ட்டர்..கட்டிங் போன்று...கால் வெற்றி- அரைவெற்றி என்கின்றன..  திமுக ஆதரவு -திமுக ஆதரவு குழு வேலை நிறுத்தம் என்றே குறிப்பிடுகின்றன..........

தமிழ்நாட்டைத்தாண்டி..டெல்லிவரைப் போய்ச்சேரும் அது நிச்சயம் அப்படியே சேர்ந்தாலும் அவர்கள்  மனது மாறுமா...?  ஐ.நா.சபையில் எதிரொலிக்குமா...? அப்போதுதான் இந்த முழுஅடைப்பு அர்த்தமுள்ளதாகும்...? 

 தலைவரின் ஆணையும் ..தளபதியின் வழிநடத்தலும் தொண்டர்களின் செயல்பாடுகளும் ....காலையில்  கைது..மாலையில் விடுதலை...என்ன செய்துவிட்டது....? என்ன செய்யப்போகிறது..? நல்லது நடக்குமா...?  
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   


இனியேனும்  இனவெறியன் இங்கே வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு  இளித்துச் செல்லும் இழிநிலை வராதிருந்தாலே....
இனியேனும் இனவெறியன் இங்கே வந்து திருப்பதி லட்டு தின்றுவிட்டு தமிழன் முகத்தில் காறித்துப்பும் இழிநிலை வராதிருந்தாலே...
இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் நமக்கு வெற்றிதான்
நாளைக்கே நயவஞ்சகன் இங்கே வந்து இலை போட்டு விருந்துண்டால்
இங்கே இன்னொரு போராட்டம் ஆர்ப்பாட்டம் நகைப்புக்குள்ளாகும்


இன்னும் எத்தனை நாளுக்குத்தான் கண்டன அறிவிக்கை விடுவீர்கள்?
உங்கள் வாய் வலிக்கவில்லையா ....தலைவர்களே?
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் கருப்புக்கொடி காட்டுவீர்கள்?
உங்கள் கைகள் வலிக்க வில்லையா ......தலைவர்களே? 
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஆர்ப்பாட்டம் செய்வீர்கள்?

உங்கள் முகமூடிகளை கழற்றி எறிந்துவிட்டு............
உங்கள் விஸ்வரூபத்தை இந்த உலகுக்கு காட்டுங்கள்...!  
நாளைய வரலாறு உங்களை நினைவில் வைத்திருக்கும்....
கல்வெட்டுகளில் அல்ல மக்கள் இதயங்களில் எழுதப்படும்....!


........................................................பரிதி.முத்துராசன்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1