google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்று மட்டும் மகளிர்தினம்..போதுமா?

Friday, March 08, 2013

இன்று மட்டும் மகளிர்தினம்..போதுமா?


அதிகாலையில் மெரினாவில் கலங்கரை விளக்கம் பின்புறமிருந்து ஆரம்பிக்கும் என் நடைபயிற்சி....எப்போதுமல்ல எப்போதாவது?

இன்று ஏழுமணிக்குத்தான் போனேன்..........கூட்டம் கூட்டமாக நிறைய மகளிர்கள்...
மகளிர் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு....கோசங்கள்...
பெண்களை பாலியல் கொடுமை செய்யாதே!
இதுதான் அவர்கள் கோசத்தின் கூக்குரல்......

காலம் எப்படியெல்லாமோ மாறிவிட்டது 
ஆனால்...
பெண்களின் வாழ்க்கை தளமும் தரமும்  மட்டும் மாறவில்லை..மாறாதோ....?
அதன் அடையாளம் தான் இந்த அணிவகுப்பா...?






































மனது ரொம்ப வேதனையாக இருந்தது...அப்படியே நடைப் பயிற்சியை பாதியில் முடித்துவிட்டு.....சாலையில் உள்ள பாதசாரிகள் நடைபாதையில் பயணித்தேன்....

அவ்வை பாட்டி சிலை அருகில் வரும் போது
அட...ஆச்சரியம்........... 
என் பார்வையில்....

அவ்வை பாட்டி கையில் இருந்த கொம்பைக் காணவில்லை 
அவ்வை பாட்டி முதுகில் இருந்த கூனியும் காணவில்லை 
அவ்வை பாட்டி சிலையில் இருந்த காகங்களின் எச்சம் இல்லை 
அவ்வை பாட்டி அழகாக இளமையாக இருந்தார்
அவ்வை பாட்டி கழுத்தில் பூமாலையுடன் சிரித்துக்கொண்டு....
அவ்வை பாட்டி நிமிர்ந்து நின்றுக்கொண்டிருந்தார்...

அப்புறம்தான் தெரிந்து கொண்டேன்............
அவ்வைப் பாட்டியை சந்திக்க...............
அம்மா வருகிறார்கள்  என்று...

அவ்வை பாட்டியே 
இன்று  மட்டும் மகளிர் தினம் போதுமா...?
இனிமேலும் பாலியல் வன்கொடுமை தீருமா...?

அறம் செய்ய விரும்பு...ஆறுவது சினம் .....
பாட்டி சொல்லைத் தட்டாதே...........
சினிமா வந்ததும் சிரித்ததும்தான் மிச்சம் 

...............................பரிதி முத்துராசன்.

எனது முந்தைய பதிவு....................

பெண்ணியம் காவலர் 

 

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1